ராமநத்தத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம்
ராமநத்தம் போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலத்தை துணை போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்.
ராமநத்தம்,
ராமநத்தம் போலீஸ் நிலையம் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு திட்டக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ் தலைமை தாங்கி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். ராமநத்தம் போலீஸ் நிலையதில் இருந்து தொடங்கிய ஊர்வலமானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் நிலையத்தை வந்தடைந்தது.
இதில் ராமநத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், டைமண்ட் பாபு, சுப்பிரமணியன், ஜெயலட்சுமி, தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் அன்வர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ரங்கநாதன், கலியமூர்த்தி, சின்னசாமி மற்றும் போலீசார், வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுனர்கள் பலர் கலந்து கொண்டு சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பின்னர் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்தனர்.
Related Tags :
Next Story