ஜம்புநதி கால்வாய் திட்டம் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தகவல்
ஜம்புநதி கால்வாய் திட்டம் இன்னும் 2 ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என்று செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. கூறினார்.
தென்காசி,

ஆலோசனை கூட்டம்
அம்பை தாலுகாவில் உள்ள ராமநதி அணையின் இருந்து உபரி நீரை அம்பை, ஆலங்குளம், கடையம், பெரும்பத்து, வெங்கடாம்பட்டி மற்றும் ஆவுடையானூர் கிராமங்கள் வழியே ஜம்பு நதிக்கு கொண்டு செல்ல ரூ.52 கோடி செலவில் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் இருந்தது. தற்போது செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. முயற்சியால் திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. கால்வாய் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்த ஆலோசனை கூட்டம் தென்காசி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இன்னும் 2 ஆண்டுகளில்...
ஜம்பு நதி மேல்மட்ட கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற அரசு தீவிரமாக ஏற்பாடு செய்து வருகிறது. தற்போது இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்குகிறது. இதில் தங்களது இடத்தை கொடுப்பதற்காக 250 பேர் ஒப்புதல் கடிதங்கள் கொடுத்துள்ளனர். இடம் கொடுப்பவர்களுக்கு அரசு நிவாரண தொகை அதிகமாக வழங்கப்படும். இன்னும் 2 ஆண்டுகளில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த திட்டம் நிறைவேறும் போது அந்த பகுதியில் உள்ள இடங்களின் மதிப்பு உயரும். பாசனம் பெருகும். சம்பந்தப்பட்ட கிராமங்களில் செழிப்பு ஏற்படும். எனவே அனைவரும் ஒன்று சேர்ந்து திட்டத்தை நிறைவேற்ற ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதிகாரிகள்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், நதிநீர் இணைப்பு திட்ட துணை கலெக்டர் மகேஸ்வரன், பொதுப்பணித்துறை சிறப்பு திட்ட கோட்ட செயற்பொறியாளர் ஞானசேகர், தாசில்தார்கள் பார்கவி தங்கம், இருதயராஜ், முருகன், பிரபாகர் அருண்செல்வம், அ.தி.மு.க. மாவட்ட பொருளாளர் சண்முக சுந்தரம், தென்காசி நகரசபை முன்னாள் துணை தலைவர் சுடலை, ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராம உதயசூரியன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story