ஓய்வூதியர்கள் நேர்காணலுக்கு கருவூலங்களில் ஆஜராக வேண்டும் கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வூதியர்கள் வருகிற ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு கருவூலங்களில் ஆஜராக வேண்டும் என்று கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.
தூத்துக்குடி,

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஓய்வூதியர்கள்
தூத்துக்குடி மாவட்ட கருவூலம் மற்றும் சார் கருவூலங்கள் மூலம் ஓய்வூதியம் பெறும் தமிழக அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஆண்டுதோறும் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை கருவூலத்தில் நேரடியாக ஆஜராகி நேர்காணலை பதிவு செய்யவும், நேரில் வர முடியாதவர்கள் வாழ்வுச்சான்று பெற்று கருவூலத்திற்கு அனுப்பவும் வேண்டும். இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை நேர்காணலுக்கு ஆஜராகி பதிவு செய்ய கருவூலத்தின் வேலை நாட்களில் நேரில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஜீவன் பிரமான் வாழ்வு சான்றிதழ் திட்டம் மூலம் ஓய்வூதியர்கள் சம்பந்தப்பட்ட கருவூலங்களுக்கு செல்லாமலேயே அரசு இ-சேவை மையங்கள் வழியாக நேர்காணலை இணையதளத்தில் (www.jeevanpramaan.gov.in) ஆதார் அட்டை மூலம் பதிவு செய்து அதன்மூலம் நேர்காணலில் பதிவு செய்ய கடந்தாண்டு முதல் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஆவணங்கள்
இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்காத ஓய்வூதியர்கள், மேற்படி ஆவணங்களின் நகல்களுடன் தங்களின் ஓய்வூதிய கொடுவை எண்ணை குறிப்பிட்டு கருவூலத்தில் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் நேரில் வரும்போது ஓய்வூதிய புத்தகம் கொண்டுவர வேண்டும்.
நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள் ஓய்வூதிய புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்கவில்லை என்றால் அவற்றின் நகல் மற்றும் வாழ்வுச்சான்றை உரிய படிவத்துடன் தாங்கள் ஓய்வூதியம் பெறும் கருவூலத்துக்கு அனுப்ப வேண்டும். வாழ்வுச்சான்றை www.tn.gov.in/karuvoolam/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த சான்றை ஓய்வூதிய வங்கிக்கணக்கு உள்ள வங்கியின் கிளை மேலாளர் அல்லது அரசிதழ் பதிவு பெற்ற மாநில மற்றும் மத்திய அரசு அலுவலர் அல்லது தாசில்தார்-துணை தாசில்தார்-வருவாய் ஆய்வாளரிடம் சான்றொப்பம் பெற்று அனுப்ப வேண்டும்.
வெளிநாட்டில் வசிப்பவர்கள்
வெளிநாட்டில் வசிப்பவர்கள் அங்குள்ள மாஜிஸ்திரேட்டு, நோட்டரி பப்ளிக், வங்கி மேலாளர் அல்லது இந்திய தூதரக அலுவலரிடம் வாழ்வுச்சான்று பெற்று, சம்பந்தப்பட்ட ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். மேலும் ஓய்வூதிய புத்தகம், இதுவரை ஆதார் அட்டை, வருமானவரி கணக்கு எண், ரேஷன் கார்டு மற்றும் நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்பு கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பிக்கவில்லை என்றால், அதன் நகலை சமர்ப்பிக்க வேண்டும். குடும்ப ஓய்வூதியர்கள் மறுமணம் புரியவில்லை என்பதற்கான உறுதிமொழியை சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதியர்கள் தற்போதைய இருப்பிட முகவரி, செல்போன் எண் போன்ற விவரங்களையும் அளிக்க வேண்டும்.
ஓய்வூதிய நிறுத்தம்
ஓய்வூதியர்கள் ஏப்ரல் முதல் ஜூன் வரை நேர்காணலுக்கு வரத்தவறினாலோ அல்லது வாழ்வுச்சான்றை அனுப்ப தவறினாலோ ஓய்வூதியம் ஆகஸ்டு மாதம் முதல் நிறுத்தப்படும். தமிழ்நாடு மின்வாரியம், ரெயில்வே, அஞ்சல்துறை, தொழிலாளர் வைப்பு நிதித்திட்டம், மத்திய அரசு ஓய்வூதியர்கள், உள்ளாட்சி மன்ற ஓய்வூதியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story