வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது
மணமேல்குடி பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த 15 பவுன் நகை, மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மணமேல்குடி,
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, கோட்டைபட்டிணம், மீமிசல், திருப்புனவாசல், ஆவுடையார்கோவில், பனையப்பட்டி உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் பூட்டை உடைத்து கடந்த 2 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில் கோட்டைபட்டினம் துணை போலீஸ் சூப்பிரண்டு காமராஜ், மணமேல்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலாஜி, கோட்டைபட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் மணமேல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு, பகலாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில் மணமேல்குடி உச்சமா காளியம்மன்கோவில் தெருவில் ஒருவர் சந்தேகத்தின் பேரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் அந்த வீட்டை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு இருந்த ஒருநபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
போலீசார் விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம், தங்கம்மாள்புரத்தை சேர்ந்த ராஜா (வயது 28) என்பதும், மணமேல்குடி பகுதியில் உள்ள வீடுகளில் கடந்த 2 மாதங்களாக தொடர் திருட்டு சம்பவத்தை நடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து ராஜாவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்த 15 பவுன் தங்க நகை, ஒரு மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் வேறு எந்த மாவட்டத்திலும் திருட்டு சம்பவத்தில் ராஜா ஈடுபட்டாரா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story