கூட்டுறவு சங்க தேர்தலில் விதிமுறை மீறல் நடந்தால் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும்
கூட்டுறவு சங்க தேர்தலில் விதிமுறை மீறல் நடந்தால், சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அதிகாரிகளே பொறுப்பேற்க வேண்டும், என கூட்டுறவு தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
நெல்லை,

கலந்தாய்வு கூட்டம்
கூட்டுறவு சங்க தேர்தல் நடைமுறைகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் நேற்று நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கலெக்டர் சந்தீப்நந்தூரி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு மாநில கூட்டுறவு தேர்தல் ஆணையாளர், மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் கையேட்டினை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் கூட்டுறவு சங்க தேர்தலை நல்ல முறையில் நடத்திட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற தேர்தல்களை போலவே கூட்டுறவு சங்க தேர்தலையும் சிறப்பாக நடத்திட வேண்டும். கூட்டுறவு சங்க தேர்தல் விதிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும்.
விதிமுறை மீறல்கள்
விதிமுறைகளில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உயர் அலுவலர்களை தொடர்பு கொண்டு தெளிவுபடுத்திகொள்ள வேண்டும். தேர்தல் நடத்துவதில் ஏதேனும் விதிமுறை மீறல்கள் ஏற்பட்டால் தேர்தல் நடத்தும் அலுவர்களே பொறுப்பேற்க வேண்டும். எனவே விதிமுறைகளை முழுமையாக சரியான முறையில் பின்பற்ற வேண்டும். எவ்வித முரண்பாடுகளும் இல்லாமல் தேர்தலை நடத்த வேண்டும்.
இட ஒதுக்கீட்டினை சரியான முறையில் பின்பற்ற வேண்டும் அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து சிறப்பாக கூட்டுறவு சங்க தேர்தலை நடத்திட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், கூடுதல் பதிவாளர் ஜான்பீட்டர் அந்தோணிசாமி, நெல்லை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் குருமூர்த்தி, மற்றும் துணை பதிவாளர்கள், கூட்டுறவு சங்க செயலாளர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story