வீட்டில் 150 பவுன் நகைகள் கொள்ளை
கிண்டி ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு வீட்டில் 150 பவுன் நகைகள் கொள்ளைபோன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆலந்தூர்,
சென்னை கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் அச்சுதன் நகர், 3-வது தெருவைச்சேர்ந்தவர் அலமேலு(வயது 65). இவருக்கு கணபதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் கணபதி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார்.
அலமேலு, தனது மகள் மற்றும் மகன் குடும்பத்தினருடன் ஒன்றாக வசித்து வருகிறார். நேற்று முன்தினம் அலமேலு, சொத்து வரி கட்டச்செல்வதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறி விட்டு வெளியே சென்றார்.
பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 200 பவுனில் 150 பவுன் நகைகள் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரது வீட்டின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே நைசாக தனது வீட்டுக்குள் புகுந்த மர்மநபர்கள், பீரோவில் இருந்த 150 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்று விட்டதாக கிண்டி போலீசில் அலமேலு புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டின் கதவு உள்பட பல இடங்களில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர்.
பீரோவில் 200 பவுன் நகைகள் இருந்துள்ளது. ஆனால் அதில் 150 பவுன் மட்டும் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. மர்மநபர்கள் என்றால் மொத்த நகைகளையும் அள்ளிச்சென்று இருப்பார்கள். மீதி நகைகளை வைத்துவிட்டு செல்ல மாட்டார்கள்.
எனவே வீட்டில் இருப்பவர்களே, அந்த நகைகளை வேறு எங்காவது எடுத்து வைத்து விட்டு, ஞாபகமறதியாக நகைகள் திருட்டுப்போனதாக கூறுகிறார்களா? எனவும், மர்மநபர்கள் யாராவது வீட்டுக்குள் நுழைந்தனரா? எனவும் வீட்டின் முன் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆராய்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story