சிவமொக்காவில் சம்பவம் காதல் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை


சிவமொக்காவில் சம்பவம் காதல் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 18 March 2018 4:30 AM IST (Updated: 18 March 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

சிவமொக்காவில் காதல் தொல்லையால் மனமுடைந்த ஒரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சிவமொக்கா,

சிவமொக்காவில் காதல் தொல்லையால் மனமுடைந்த ஒரு இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக செல்போன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இளம்பெண்


சிவமொக்கா டவுன் வெங்கடேஷ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் சேத்தனா(வயது 19). இவர் சிவமொக்கா மாச்சேனஹள்ளியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் இவருக்கும், வெங்கடேஷ் நகரைச் சேர்ந்த செல்போன் கடை உரிமையாளர் சீனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் சேத்தனா நட்பாக பழகி வந்தார். ஆனால் சீனா, சேத்தனாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். இதையடுத்து அவர் தனது காதலை சேத்தனாவிடம் தெரிவித்தபோது அவர் ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து சீனா, சேத்தனாவுக்கு காதல் தொல்லை கொடுத்து வந்தார்.

பரபரப்பு

இதனால் மனமுடைந்த சேத்தனா நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அதைப்பார்த்து அவருடைய குடும்பத்தினரும், அக்கம்பக்கத்தினரும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் இதுகுறித்து ஜெயநகர் போலீசில் புகார் செய்தனர்.

புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் சேத்தனாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சேத்தனாவுக்கு காதல் தொல்லை கொடுத்த சீனாவின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story