மின்சார ரெயிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல் 2 பேர் மீது வழக்குப்பதிவு
மின்சார ரெயிலில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மும்பை,

பெண் சப்-இன்ஸ்பெக்டர்
மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருபவர் பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஷாமா செய்யது (வயது33). இவர் நேற்று முன்தினம் டிட்வாலாவில் இருந்து சி.எஸ்.எம்.டி. நோக்கி வந்த மின்சார ரெயிலில் முதல் வகுப்பு பெட்டியில் பயணித்து கொண்டு இருந்தார். இந்தநிலையில் 4 பெண்கள் அந்த பெட்டியில் ஏறினர். அவர்கள் ஷாமா செய்யதுவிடம் டிக்கெட்டை காண்பிக்குமாறு கூறினர். அவர் டிக்கெட்டை காண்பிக்க மறுத்தார். எனவே 4 பெண்கள் சேர்ந்து ஷாமா செய்யதுவின் பையை பறித்து தூக்கி எறிந்தனர். அவர் பையை எடுக்க சென்ற போது 4 பேரில் ஒருவர் அவர் இருந்த இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்.
தாக்குதல்
இதனால் ஷாமா செய்யதுவிற்கும் 4 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேரும் பெண் சப்-இன்ஸ்பெக்டர் ஷாமா செய்யதுவை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஷாமா செய்யது சி.எஸ். எம்.டி. ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் ஷாமா செய்யதுவை தாக்கியதாக சினேகா தாகிர் சேக் (33), ஹர்ஷா (25) ஆகிய 2 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். மற்ற 2 பெண் பயணிகள் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story