பெண் போலீசை தாக்கிய இளம்பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில்


பெண் போலீசை தாக்கிய இளம்பெண்ணுக்கு 3 மாதம் ஜெயில்
x
தினத்தந்தி 18 March 2018 4:25 AM IST (Updated: 18 March 2018 4:25 AM IST)
t-max-icont-min-icon

பெண் போலீசை தாக்கியஇளம் பெண்ணுக்கு3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

மும்பை,

பெண் போலீசை தாக்கியஇளம் பெண்ணுக்கு3 மாதம் ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

தாக்கினார்

மும்பையில் ஆண்டு தோறும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். குறிப்பாக லால்பாக் ராஜா விநாயகரை லட்சக் கணக்கான மக்கள் தரிசனம் செய்வார்கள்.

கடந்த 2013-ம் ஆண்டு செப்டம்பர் 16-ந் தேதி விநாயகர் சதுர்த்தி சமயத்தில் பிரியங்கா (வயது24) என்ற பெண், பக்தர்கள் தரிசனம் செய்துவிட்டு வெளியேறும் வழியாக லால்பாக் ராஜா மண்டல் உள்ளே செல்ல முயன்றார். அப்போது அங்கு பணியில் இருந்த கவிதா என்ற பெண் போலீஸ் அவரை தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த பிரியங்கா பெண் போலீஸ் கவிதாவை தாக்கினார்.

ஜெயில் தண்டனை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு பிரியங்காவிற்கு ஜெயில் தண்டனை வழங்கியது.

இதை எதிர்த்து அவர் மும்பை செசன்ஸ் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தார். செசன்ஸ் கோர்ட்டு பெண் போலீசை தாக்கிய பிரியங்காவை வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்துவிட்டது. எனினும் அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை 3 மாதங்களாக குறைத்து உத்தரவிட்டது.

Next Story