சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 3 பேர் பலி


சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதி 3 பேர் பலி
x
தினத்தந்தி 18 March 2018 4:28 AM IST (Updated: 18 March 2018 4:28 AM IST)
t-max-icont-min-icon

சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

தானே,

சாலையோரம் நின்ற லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலியானார்கள்.

லாரி மீது மோதியது

பால்கர் மாவட்டம் நாலச்சோப்ராவை சேர்ந்தவர் மனோஜ் (வயது23). இவரது சகோதரியின் திருமணம் சமீபத்தில் நடந்தது. இதில் கலந்து கொள்ள நாசிக் மருத்துவ கல்லூரியில் படித்து வரும் மனோஜின் உறவுப்பெண் தனுஸ்ரீ வந்து இருந்தார். இந்தநிலையில் திருமணம் முடிந்து நேற்று முன்தினம் தனுஸ்ரீ கல்லூரிக்கு சென்றார். அவரை மனோஜ் காரில் கல்லூரிக்கு அழைத்து சென்றார். மேலும் காரில் தனுஸ்ரீயின் தந்தை ஹேமந்த்(45), தாய் மதுமதி, தம்பி தீரஜ், உறவினர் ரமேஷ் ஆகியோர் இருந்தனர்.

கார் மும்பை - ஆக்ரா நெடுஞ்சாலை உமர்மாலி விலேஜ், கசாரா காட் அருகே சென்ற போது திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியில் பயங்கரமாக மோதியது.

3 பேர் பலி

மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்த அனைவரும் படுகாயமடைந்து உயிருக்கு போராடினர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் படுகாயங்களுடன் கிடந்தவர்களை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதில் மனோஜ், ஹேமந்த், ரமேஷ் ஆகியோர் கொண்டு வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக டாக்டர்கள் கூறினர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story