செல்போன் அழைப்பு விவரங்களை சட்டவிரோதமாக வாங்கிய நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வக்கீல் கைது


செல்போன் அழைப்பு விவரங்களை சட்டவிரோதமாக வாங்கிய நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வக்கீல் கைது
x
தினத்தந்தி 18 March 2018 4:37 AM IST (Updated: 18 March 2018 4:37 AM IST)
t-max-icont-min-icon

செல்போன் அழைப்பு விவரங்களை சட்டவிரோதமாக வாங்கிய விவகாரத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

செல்போன் அழைப்பு விவரங்களை சட்டவிரோதமாக வாங்கிய விவகாரத்தில் நடிகர் நவாசுதீன் சித்திக்கின் வக்கீல் கைது செய்யப்பட்டார்.

செல்போன் அழைப்பு விவரம்


தனிநபரின் செல்போன் அழைப்பு விவரங்களை திருடி சட்டவிரோதமாக விற்பனை செய்த பெண் துப்பறிவாளர் ரஞ்சனி பண்டிட் உள்பட 11 பேர் சமீபத்தில் தானேயில் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து நடிகர் நவாசுதீன் சித்திக்கும் தனது மனைவியின் செல்போன் அழைப்புவிவரங்களை சட்டவிரோதமாக வாங்கியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு தானே போலீசார் நடிகர் நவாசுதீன் சித்திக், அவரது மனைவி மற்றும் வக்கீலுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் அவர்கள் யாரும் போலீசாரிடம் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

வக்கீல் கைது


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு தானே போலீசார் நடிகரின் வக்கீல் ரிஸ்வான் சித்திக்கை கைது செய்தனர். இதுகுறித்து தானே போலீஸ் செய்தி தொடர்பாளர் சுகதா நார்கர் கூறும்போது:-

விசாரணையின் போது நடிகர்நவாசுதீன் சித்திக்கின் வக்கீல் கைதானவர்களிடம் இருந்து செல்போன் அழைப்பு விவரங்களை வாங்கியது தெரியவந்தது. இதுகுறித்து விசாரிக்க அவருக்கு சம்மன் அனுப்பினோம். ஆனால் அவர் வந்து விளக்கம் அளிக்கவில்லை. எனவே மும்பையில் உள்ள அவரது வீட்டில் வைத்து வக்கீல் ரிஸ்வான் சித்திக்கை கைது செய்தோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

கைது செய்யப்பட்ட வக்கீலின் செல்போன், அவரது அலுவலக கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் போலீசார் பறிமுதல் செய்து ஆய்வு செய்து வருவதாக போலீஸ்அதிகாரி ஒருவர்கூறினார்.

Next Story