அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி சாமிதோப்பு தலைமை பதியில் உண்ணாவிரதம்
அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க கோரி சாமிதோப்பு தலைமைபதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
தென்தாமரைகுளம்,
அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க கோரி சாமிதோப்பு தலைமைபதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் சீமான், என்.ஆர்.தனபாலன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
சாமிதோப்பு தலைமை பதி
கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பில் அய்யா வைகுண்டரின் தலைமை பதி உள்ளது. கடந்த 4-ந்தேதி இங்கு அய்யா வைகுண்டர் அவதார தின விழா நடைபெற்றது.
இந்த விழாவில் இந்து அறநிலையத்துறை அதிகாரி தலையிட்டதை கண்டிப்பதாக கூறியும், அய்யாவழி மக்களின் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும் நேற்று காலையில் சாமிதோப்பு தலைமை பதி முன்பு கலையரங்கத்தில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பாலபிரஜாபதி அடிகளார் தலைமை தாங்கினார்.
சாமிதோப்பு பதி நிர்வாகிகள் பால ஜனாதிபதி, பாலலோகாதிபதி, பையன் ஆனந்த், அய்யா வைகுண்டர் அறநிலைய பரிபாலன அறக்கட்டளை நிர்வாகி ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெருந்தலைவர் மக்கள் கட்சி நிறுவன தலைவர் என்.ஆர்.தனபாலன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், எம்.எல்.ஏ.க்கள் அனிதா ராதாகிருஷ்ணன், சுரேஷ்ராஜன், ஆஸ்டின், முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
என்.ஆர்.தனபாலன்
போராட்டத்தில் என்.ஆர்.தனபாலன் பேசியதாவது:-
அய்யாவழியில் மட்டுமே முழுக்க முழுக்க தமிழில் வழிபாடு நடைபெறுகிறது. அய்யாவழி கோவில்களில் கருவறை வரை பெண்கள் செல்ல அனுமதி உண்டு. இதுதான் அய்யாவழியின் சிறப்பு.
அறநிலையத்துறை அதிகாரிகள் சாமிதோப்பு தலைமை பதியை கையகப்படுத்த நினைத்தால் சமீபத்தில் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டத்தை போல் பெரும் போராட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு என்.ஆர்.தனபாலன் பேசினார்.
சீமான்
உண்ணாவிரதத்தில் சீமான் பேசியதாவது:-
வரலாற்றில் தெளிவு பெற முடியாத எந்த இனமும் எழுச்சி பெறமுடியாது. வரலாற்றை படிக்காதவன், வரலாற்றை படைக்க முடியாது. வரலாறு என்பது கடந்த காலத்தின் செய்திகளை சேர்த்து வைக்கிற ஏடு அல்ல. எதிர்காலத்தின் அடித்தளம். வரலாற்றை மறந்த இனமும், வேரை இழந்த மரமும் வாழ்ந்ததாக இல்லை. காலில் வீழ்ந்து கிடக்கிற ஒருவனை எவன் தூக்கி விடுகிறானோ அவன்தான் உலகத்தில் உயர்ந்த மனிதன். இதைத்தான் அய்யா செய்தார். கொத்தடிமைகளாக வீழ்ந்து கிடந்த பிற்படுத்தப்பட்ட நாடார் சமுதாயத்தை தலைநிமிர செய்தார்.
பிறப்பின் அடிப்படையில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற நிலை இருக்கக்கூடாது என்று நினைத்து அதை உடைத்து நொறுக்கிய புரட்சியாளர் அய்யா வைகுண்டர். தமிழன் மதம் வேறு, தமிழன் பண்பாடு வேறு, தமிழன் வழிபாடும் வேறு. இதுதான் வரலாறு. தமிழ் இனம் மூத்த இனம். இந்த இனத்திற்கு கலை, இலக்கியம், பண்பாடு உள்ளது. பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக பாடுபட்டு, அவர்களுக்கு என்று ஒரு தனி வழிபாட்டை உருவாக்கியவர் அய்யா.
அய்யா வழி ஒரு வழி. அதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அந்த வழிபாட்டை யாருக்காகவும் விட்டுக் கொடுக்கவும் முடியாது. அதையும் மீறி அறநிலையத்துறை இந்த பதியை கையகப்படுத்த நினைத்தால் பிற்படுத்தப்பட்ட மக்கள் மட்டுமின்றி, அனைத்து சாதி மத இன மக்களின் எதிர்ப்பையும் அரசு சந்திக்க நேரிடும்.
இவ்வாறு சீமான் பேசினார்.
பாலபிரஜாபதி அடிகளார்
முன்னதாக பாலபிரஜாபதி அடிகளார் பேசும் போது, “எங்கள் கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும், அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் அய்யாவழி மக்களை திரட்டி போராட்டம் வாரந்தோறும் நடத்த உள்ளோம். வருகிற ஞாயிற்றுக்கிழமை சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள அய்யாவழி மக்களை திரட்டி சேலத்தில் போராட்டம் நடத்தப்படும். இதே போல் இனி வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் போராட்டம் வெவ்வேறு இடங்களில் நடைபெறும்“ என்றார்.
தனி மதமாக அறிவிக்க வேண்டும்
போராட்டத்தில் திருச்செந்தூர் தொகுதி எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் பேசுகையில் “அய்யாவழி என்பது தனி வழிபாட்டு முறையை கொண்டது. மக்களை தலை நிமிர்ந்து நடக்க வைப்பதற்காக அய்யா கொண்டு வந்த அன்புவழி இது. எனவே அய்யா வழியை தனி மதமாக அறிவிக்க வேண்டும்“ என்று கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி நெல்லை, தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், சென்னையில் இருந்தும் வந்த அய்யாவழி பக்தர்கள், நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள், கேரளாவில் உள்ள நாடார் அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாலையில் பதி நிர்வாகிகளுக்கு பழச்சாறு கொடுத்து சீமான் உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.

Related Tags :
Next Story