மின்மாற்றி பொருத்தப்படாமல் காட்சி பொருளாக உள்ள மின் கம்பங்கள்
திட்டச்சேரி அருகே மின் கம்பங்களில் மின் மாற்றி பொருத்தப்படாமல் காட்சி பொருளாக உள்ளதால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திட்டச்சேரி,
நாகை மாவட்டம் திட்டச்சேரி அருகே அனந்தநல்லூர், காலனித்தெரு, மாரியம்மன் கோவில் தெரு, மேலத்தெரு உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் சுமார் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதிகளில் சில ஆண்டுகளாகவே குறைந்த மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் உள்ள மின்விசிறி, மிக்சி, கிரைண்டர், மின் மோட்டார்கள் உள்ளிட்டவைகளை உபயோகப்படுத்த முடியாமல் அவதியடைந்து வருகின்றனர். மேலும், மின் மோட்டார் இயக்க முடியாததால் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்ற முடியாமலும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இரவு நேரங்களில் மிகவும் குறைந்தழுத்த மின்சாரத்தால் மின் விளக்குகளும் சரிவர எரியவில்லை என கூறப்படுகிறது. இதனால் மாணவ, மாணவிகள் இரவு நேரங்களில் படிக்க முடியாமலும் அவதியடைகின்றனர். தற்போது அரசு பொதுத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் மின் விளக்குகள் சரிவர எரியாததால் சிரமப்படுகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு பல்வேறு கோரிக்கைகள் விடுத்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதிகளுக்கு சீரான மின்சாரம் வழங்குவதற்காக அனந்தநல்லூரில் மின்மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மின் மாற்றி அமைப்பதற்காக அந்த பகுதியில் 4 மின் கம்பங்கள் நடப்பட்டு, கம்பிகள் பொறுத்தப் பட்டன. பின்னர் அந்த பணி பாதியில் நிறுத்தப்பட்டது. மின்கம்பத்தில் மின் மாற்றி பொருத்தப்படவில்லை.
இந்த மின் கம்பங்கள் கடந்த 2 ஆண்டுகளாக காட்சி பொருளாக உள்ளன. தற்போது தேர்வு நேரம் என்பதால் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். அதேபோல் பல்வேறு பணிகளுக்கு செல்பவர்களும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட மின்சார வாரிய அதிகாரிகள் மாணவ, மாணவிகள், பொதுமக்களின் நலன் கருதி அனந்தநல்லூரில் அமைக்கப்பட்ட மின் கம்பங்களில் மின்மாற்றி பொருத்தி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Tags :
Next Story