இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான 4 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை
இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கில் கைதான 4 பேரின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அவர்களிடம் இருந்து செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.
கோவை,
இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தி தொடர்பாளராக இருந்தவர் சசிகுமார் (வயது 38). இவர் கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ந் தேதி இரவு கோவை துடியலூர் அருகே உள்ள தனது வீட்டிற்கு செல்லும் வழியில் படுகொலை செய்யப்பட்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசுக்கு மாற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து அந்த பிரிவின் உயர் அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு விசாரணையை தீவிரப் படுத்தினார்கள். இந்த வழக்கில் கோவை சாய்பாபாகாலனி கே.கே.புதூரை சேர்ந்த முபாரக் (35), கருணாநிதி நகரை சேர்ந்த சதாம் உசேன் (27), கோவை உக்கடம் ஜி.எம். நகரை சேர்ந்த சுபேர் (33), கரும்புக் கடையை சேர்ந்த அபுதாகீர் (32) ஆகிய 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து தலைமறைவாக இருந்த அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் போலீசார் அவர்கள் 4 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
அவர்கள் 4 பேரும் தங்களுக்கு ஜாமீன் கேட்டு கோவை கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். ஓரிரு முறை அவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. பிறகு சதாம் உசேன், அபுதாகீர் ஆகியோருக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது. இதை தொடர்ந்து அவர்கள் 2 பேரும் சிறையில் இருந்து வெளியே வந்தனர். தற்போது சுபேர், முபாரக் ஆகியோர் மட்டும் சேலம் மத்திய சிறையில் உள்ளனர்.
இந்த கொலை வழக்கில் மேலும் பலருக்கு தொடர்பு இருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசார ணையில் தொய்வு ஏற்பட்டதாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவையில் உள்ள ரேஸ்கோர்ஸ் பகுதியில் அந்த முகமையின் தற்காலிக அலுவலகம் அமைக்கப்பட்டது.
இந்த நிலையில் கடந்த மாதத்தில் தேசிய புலனாய்வு முகமையின் போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் மற்றும் உயர் அதிகாரிகள் ஐதராபாத்தில் இருந்து கோவை வந்தனர். அவர்கள் இந்த வழக்கு தொடர்பாக தீவிர விசாரணை நடத்தியதுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தங்களிடம் ஒப்படைத்த ஆவணங் களை சரிபார்த்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக ரகசியமாக விசாரணை நடைபெற்றது.
இதற்கிடையே போலீஸ் சூப்பிரண்டு எல்.ஆர்.குமார் தலைமையில் 24 உயர் அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கோவை வந்தனர். இதில் தலா 6 பேர் கொண்ட குழுவினர் தனித்தனியாக பிரிந்து சுபேர், முபாரக், சதாம் உசேன் மற்றும் அபுதாகீர் ஆகிய 4 பேரின் வீடுகளுக்கு நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்றனர். பின்னர் அதிகாரிகள் அவர்களின் வீடுகளுக்குள் புகுந்து அதிரடி சோதனையில் ஈடுபட்ட னர். அத்துடன் வீடுகளில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
அப்போது கோவை மாநகர போலீசார் அவர்கள் 4 பேரின் வீடுகள் முன்பு பாதுகாப்பு பணியில் ஈடு பட்டனர். சுபேர், அபுதாகீர் ஆகியோர் வீடுகளில் காலை 8 மணிக்கு விசாரணை முடிவடைந்தது. ஆனால் முபாரக், சதாம் உசேன் ஆகியோர் வீடுகளில் விசாரணை தொடர்ந்து நடந்தது. அப்போது முபாரக், சதாம்உசேன் வீடுகளில் இருந்த உறவினர்களிடமும் அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை செய்தனர். பின்னர் பிற்பகல் 12 மணிக்கு விசாரணை முடிந்ததும் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
இது குறித்து போலீஸ் உயர் அதிகாரிகள் கூறிய தாவது:-
சசிகுமார் கொலை வழக்கில் கைதான முபாரக், சதாம்உசேன், சுபேர் மற்றும் அபுதாகீர் ஆகிய 4 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர்களுக்கு பல்வேறு தகவல் கிடைத்து உள்ளது. அபுதாகீர் வீட்டில் இருந்து 3 செல்போன்களும், சுபேர் வீட்டில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அத்துடன் கைதானவர்களின் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
மேலும் அவர்கள் 4 பேரும் தலைமறைவாக இருந்தபோது, அவர்களுக்கு உதவி செய்தவர்கள் யார்? அவர்களுக்கும், கைதானவர்களுக்கும் என்ன தொடர்பு? அவர்களுக்கு பணம் எங்கிருந்து வந்தது? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்யப்பட்டது. அதில் சில தகவல்கள் அதிகாரிகளுக்கு கிடைத்து உள்ளது. மேலும் இந்த வழக்கு தொடர்பாக கூடுதல் தகவல்களையும் அதிகாரிகள் திரட்டி வருகிறார்கள்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
Next Story