வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
x
தினத்தந்தி 19 March 2018 2:00 AM IST (Updated: 19 March 2018 12:41 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

இலவச தொழிற்பயிற்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நாகலாபுரம் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த பயிற்சி அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி முதல் தொடங்குகிறது. இதில் கியாஸ் வெல்டிங் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.

பெயர் பதிவு

இந்த பயிற்சியில், 8-ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில் சேர விரும்புவோர் வருகிற 2-ந்தேதிக்குள் உமறுப்புலவர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரில் வந்து தங்கள் பெயரை பதிவு செய்து பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு பயணப்படியாக ரூ.100, பயிற்சியின் முடிவில் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு 04638 242687, 9842197566 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு கலெக்டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Next Story