புதுக்கோட்டை அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு


புதுக்கோட்டை அருகே விபத்தில் காயம் அடைந்த தொழிலாளி சாவு
x
தினத்தந்தி 19 March 2018 2:00 AM IST (Updated: 19 March 2018 12:46 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்

தூத்துக்குடி,

புதுக்கோட்டை அருகே நடந்த விபத்தில் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கட்டிட தொழிலாளிகள்

புதுக்கோட்டை அருகே உள்ள தெற்கு காரசேரியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவருடைய மகன் லட்சுமணன் (வயது 34). அதே பகுதியை சேர்ந்தவர் சங்கரலிங்கம் (26). இவர்கள் இருவரும் கட்டிட தொழிலாளிகள். இவர்கள் கடந்த 15-ந்தேதி இரவு தூத்துக்குடியில் வேலையை முடித்து விட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை லட்சுமணன் ஓட்டினார். அவர்கள் தட்டப்பாறை விலக்கு அருகே சென்றபோது, தட்டப்பாறை பெண் போலீஸ் ஏட்டு ஜெயசுந்தரி (42) பணி முடிந்து வீட்டுக்கு மொபட்டில் வந்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மொபட்டும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த லட்சுமணன், சங்கரலிங்கம் ஆகிய 2 பேரும் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க் கப்பட்டனர். லேசான காயம் அடைந்த ஜெயசுந்தரி சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

சாவு

இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் தட்டப்பாறை போலீஸ் ஏட்டு ஜெயசுந்தரி மீது விபத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் விபத்து மரணம் வழக்காக மாற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story