தூத்துக்குடியில் இலவச தொழில் மேலாண்மை பயிற்சி நாளை தொடங்குகிறது
தூத்துக்குடியில் இலவச தொழில் மேலாண்மை பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தூத்துக்குடி,
தூத்துக்குடியில் இலவச தொழில் மேலாண்மை பயிற்சி நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது.
தொழில் மேலாண்மை பயிற்சி
தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், மாவட்ட தொழில் மையம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட சிறு, குறு தொழில் சங்கம் (துடிசியா) ஆகியவை இணைந்து இலவச தொழில் மேலாண்மை பயிற்சியை தூத் துக்குடியில் உள்ள துடிசியா அரங்கத்தில் நடத்துகிறது. அதன்படி நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரை சிக்கன உற்பத்தி மேலாண்மை பயிற்சியும், நாளை மறுநாள் (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை டிஜிட்டல் மார்க்கெட்டிங் குறித்த பயிற்சியும், 22-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை சந்தைப்படுத்துதல் மற்றும் விற்பனை மேலாண்மை பயிற்சியும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை கிரெடிட் ரேட்டிங் பயிற்சியும், 23-ந்தேதி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைமுறை மூலதன மேலாண்மை பயிற்சியும், அன்று மாலை 4-30 மணி முதல் இரவு 8-30 மணி வரை வரி மேலாண்மை பயிற்சியும், 24-ந்தேதி காலை 10 மணி முதல் 1 மணி வரை மாற்று எரிசக்தி முறைகள் குறித்த பயிற்சியும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அடிப்படை கணக்கியல் மற்றும் பதிவேடு பராமரிப்பு குறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
முன்பதிவு
இந்த பயிற்சியில் கலந்து கொள்ள கட்டணம் கிடையாது. சிறு, குறு தொழில் முனைவோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சிகளில் கலந்து கொள்ள துடிசியாவில் முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த தகவலை தூத்துக்குடி மாவட்ட கலெக் டர் வெங்கடேஷ் தெரிவித்து உள்ளார்.

Related Tags :
Next Story