விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள், நலத்திட்ட உதவிகள் அமைச்சர்கள் வழங்கினர்
விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் வழங்கினர்.
நாமக்கல்,
புதுடெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட வேளாண்மை அறிவியல் நிலையங்களின் தேசிய மாநாடு தொடக்க விழா, 25 புதிய வேளாண்மை அறிவியல் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டுவிழா மற்றும் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு ஆக்குவது குறித்த பிரதமரின் சிறப்புரையை காணொலி காட்சிப்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதையொட்டி நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் சார்பில் பிரதமர் மோடியின் காணொலி காட்சி நிகழ்ச்சி, கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாமக்கல்லில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஆசியா மரியம் தலைமை தாங்கினார். பி.ஆர்.சுந்தரம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கே.பி.பி.பாஸ்கர், சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலன் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகள் சாகுபடி செய்து வரும் பாரம்பரிய ரகங்களான நெல், கம்பு, திணை, வரகு, காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனை திரவிய பயிர் ரகங்கள் குறித்த கண்காட்சியினை பார்வையிட்டனர்.
அதை தொடர்ந்து விவசாயிகளின் வருமானத்தை இருமடங்கு ஆக்குதல் குறித்த பிரதமரின் காணொலி காட்சியினை பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
இதில் நாமக்கல் சப்-கலெக்டர் கிராந்தி குமார், நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய உதவி பேராசிரியர்கள் முருகன், சர்மிளா பாரதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சுப்பிரமணியம் உள்பட முன்னாள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், கூட்டுறவாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story