தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிப்பார் அர்ஜூன் சம்பத் பேட்டி
தமிழகத்தில் ரஜினிகாந்த் ஆட்சியை பிடிப்பார் என நிருபர்களுக்கு அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார்.
கண்டமனூர்,
கண்டமனூரில், இந்து மக்கள் கட்சியின் மாவட்ட கிளை அமைப்பு கூட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கட்சியின் மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு பேசினார். பின்னர் மாவட்ட தலைவராக மந்திச்சுனை வேல்முருகன் நியமனம் செய்யப்பட்டார். கூட்டத்தில் மாநில அமைப்புச் செயலாளர் கண்மணிராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்ட முடிவில், நிருபர்களுக்கு அர்ஜூன் சம்பத் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘குரங்கணி காட்டுத்தீ சம்பவத்தில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக அவதூறு பரப்பும் சீமான், வைகோ போன்றவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும். மதுரையில் மதமாற்றம் செய்தவர்களை தடுத்ததற்காக, கட்சி நிர்வாகிகளை கைது செய்துள்ளனர். இதனை கண்டிக்கிறோம். ஆன்மீக அரசியல் நடத்தும் நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பார். எங்களிள் முழு ஆதரவு அவருக்கு உண்டு. திராவிடம் என்ற பேச்சு இனி செல்லுபடி ஆகாது’ என்றார்.

Related Tags :
Next Story