பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதல்; முதியவர் பலி 3 பேர் படுகாயம்


பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதல்; முதியவர் பலி 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 March 2018 10:15 PM (Updated: 18 March 2018 8:50 PM)
t-max-icont-min-icon

வேலாயுதம்பாளையம் அருகே பாலத்தின் தடுப்பு சுவரில் கார் மோதியதில் முதியவர் பலியானார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.

நொய்யல்,

வேலாயுதம்பாளையம் அருகே உள்ள புகளூர் காகித ஆலை குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் ரவிச்சந்திரன்(வயது 52), சவுந்தரராஜன்(64), தாமஸ்லியோபீட்டர்(55), செல்வராஜ்(21). இவர்கள் 4 பேரும் நேற்று முன்தினம் திருப்பூரில் நடைபெற்ற பாரதீய மஸ்தூர் சங்க மாநாட்டில் கலந்துகொள்ள ஒரு காரில் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புறப்பட்டு திருப்பூர் நோக்கி சென்றனர். காரை தாமஸ்லியோபீட்டர் ஓட்டினார். திருப்பூரில் மாநாடு முடிந்ததும் 4 பேரும் மீண்டும் வேலாயுதம்பாளையம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது புன்னம்சத்திரம்– வேலாயுதம்பாளையம் சாலையில் வந்து கொண்டு இருந்தபோது கார் நிலைதடுமாறி புகளூர் ரெயில்வே கேட் அருகே உள்ள பாலத்தின் தடுப்பு சுவரில் மோதியது.


இதில் படுகாயம் அடைந்த சவுந்தரராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் படுகாயம் அடைந்த மற்ற 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்ட சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சவுந்தரராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story