இடைத்தேர்தல் நடைபெற உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் தக்க வைக்க பா.ஜனதா வியூகம் வகுக்கிறது
மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் தக்க வைத்து ெகாள்ள பா.ஜனதா தயாராகிறது.
மும்பை,
மராட்டியத்தில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள 2 நாடாளுமன்ற தொகுதிகளையும் தக்க வைத்து ெகாள்ள பா.ஜனதா தயாராகிறது. பா.ஜனதாவை வீழ்த்த எதிர்க்கட்சிகளும் வரிந்து கட்டுகின்றன.
இடைத்தேர்தல்
மராட்டியத்தில் பண்டாரா-கோண்டியா தொகுதியில் எம்.பி.யாக இருந்த பா.ஜனதாவை சேர்ந்த நானா பட்டோலே கடந்த ஆண்டு அவரது பதவியை ராஜினாமா செய்துவிட்டு காங்கிரசில் இணைந்தார்.
இது தவிர பால்கர் தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யான சிந்தாமன் வாங்கா கடந்த ஜனவரியில் இறந்தார். இதன் காரணமாக மேற்கண்ட 2 தொகுதிகளும் காலியாக உள்ளன. இந்த 2 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.
பா.ஜனதாவுக்கு தொடர் தோல்வி
இதற்கிடையே சமீபத்தில் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரில் நடைபெற்ற 3 நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தல்களிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்தது. வரும் 2019-ல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் வரவுள்ள நிலையில் பா.ஜனதா அதன் கோட்டையாக கருதும் உத்தரபிரதேசத்தில் தோல்வி அடைந்திருப்பது அக்கட்சிக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோல கடந்த மாதம் ராஜஸ்தானில் நடைபெற்ற இடைத்தேர்தலிலும் காங்கிரசிடம் ஆளும் பா.ஜனதா தோல்வி அடைந்தது. இதுதவிர மத்திய பிரதேச இடைத்தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மேலும் குஜராத் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா ஆட்சியைக் கைப்பற்றினாலும் அதன் வாக்கு வங்கி குறைந்ததோடு காங்கிரசின் வாக்குகள் அதிகரித்தன.
மேற்கண்ட தேர்தல்களில் பா.ஜனதாவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து செயல்பட்டன. குறிப்பாக உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி மற்றும் பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகள் ஒன்றாக பணியாற்றி பா.ஜனதாவை தோற்கடித்தன.
எதிர்க்கட்சிகள் ஒன்றுசேர முடிவு
இவற்றால் உற்சாகமடைந்த எதிர்க்கட்சிகள் மராட்டியத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலிலும் இதே போல் கூட்டணி அமைத்து பா.ஜனதாவை வீழ்த்த முடிவு செய்துள்ளன. இதற்காக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் இடையே தீவிரமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த மராட்டிய பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் மாதவ் பண்டாரி, பிற மாநிலங்களில் பா.ஜனதாவுக்கு ஏற்பட்ட பின்னடைவுக்கு வெவ்வேறு காரணங்கள் இருப்பதாகவும், உத்தரபிரதேச தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்கு கட்சிக்குள் ஏற்பட்ட சிறுசிறு தடுமாற்றங்களே காரணம் எனவும் கூறினார்.
இதையடுத்து பால்கர் மாவட்ட பஞ்சாயத்து சமதியில் பா.ஜனதா வலுவாக இருப்பதை சுட்டிக்காட்டிய அவர், மறைந்த பா.ஜனதா தலைவர் சிந்தாமன் வாங்காவின் நற்பெயருக்காகவே மக்கள் தங்களுக்கு வாக்களிப்பார்கள் என கூறினார்.
மேலும் பண்டாரா-கோண்டியா தொகுதியில் மக்களுக்கு நானோ பட்டோலே மீது உள்ள அதிருப்தி, காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் இடையேயான தெளிவற்ற கூட்டணி ஆகியவை பா.ஜனதாவுக்கு சாதகமாக அமையும் எனவும் அவர் தெரிவித்தார்.
மக்கள் கொந்தளிப்பாக...
தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக், பா.ஜனதா இடைத்தேர்தலுக்கான தேதிகளை வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கிராமங்களில் மக்கள் பா.ஜனதா மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். பீமா-கோரேகாவ் வன்முறை, விவசாய கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசு மீது மக்கள் கொந்தளிப்பாக உள்ளனர். இவை வருகிற இடைத்தேர்தலில் நிச்சயம் எதிரொலிக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மராட்டியத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கிடைக்கும் வெற்றி வருகிற 2019 -ம் ஆண்டு நடாளுமன்ற பொதுத்தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் என்பதால் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களை தயார்படுத்தும் பணியில் தீவிரம் காட்டி உள்ளன.
குறிப்பாக பா.ஜனதா தலைவர் அமித்ஷா அடுத்த மாதம் மும்பை வந்து தேர்தல் வியூகம் வகுக்க இருப்பதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story