மாநிலம் முழுவதும் மராத்தி புத்தாண்டு உற்சாக கொண்டாட்டம்
மாநிலம் முழுவதும் மராத்தி புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மும்பை,
மாநிலம் முழுவதும் மராத்தி புத்தாண்டு உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
மராத்தி புத்தாண்டு
மராட்டியர்களின் புத்தாண்டான ‘குடிபட்வா' நேற்று மும்பையில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மராட்டியர்கள் சைத்ர மாதத்தின் முதல் நாளை புத்தாண்டாக கொண்டாடி வருகின்றனர். புத்தாண்டையொட்டி நேற்று பொது மக்கள் வீடுகளை பூக்களால் அலங்கரித்து பூஜை செய்தனர். குறிப்பாக குழந்தைகளின் பாடப்புத்தகங்களை வைத்து சரஸ்வதியை வழிபட்டனர்.
மேலும் வீடுகளில் முன் ‘குடி' எனப்படும் வெற்றி கம்பத்தை வைத்து இருந்தனர். ராமர், ராவணனை கொன்று சீதையுடன் திரும்பிய போது மக்கள் அவரை வரவேற்கும் வகையில் இந்த வெற்றி கம்பத்தை வீட்டின் முன் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதேபோல மக்கள் வீட்டின் முன் வண்ணக்கோலங்கள் இட்டும், பொது இடங்களில் பிரமாண்ட ரங்கோலிகளை வரைந்தும் புத்தாண்டை கொண்டாடினர்.
டோல் இசை, மோட்டார் சைக்கிள் பேரணி
மராத்தி புத்தாண்டையொட்டி நேற்று ஆண்களும், பெண்களும் பாரம்பரிய உடையணிந்து பொது இடங்களில் கூடினர். அவர்கள் டோல் இசை இசைத்து உற்சாகமாக ஆடிப்பாடி புத்தாண்டை கொண்டாடினர். கிர்காவ் பகுதியில் பெண்கள் பாரம்பரிய உடையணிந்து டோல் இசைத்த காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இதேபோல அவர்கள் கூட்டமாக மோட்டார் சைக்கிள்களில் பேரணியாக சென்ற காட்சியும் பிரமிக்கும் வகையில் இருந்தது.
ஆண்கள் வாள் சண்டை, சிலம்பம் உள்ளிட்ட வீரதீர விளையாட்டுகளை விளையாடினர். புத்தாண்டு கொண்டாட்டத்தால் நேற்று மும்பை நகரமே விழாக்கோலம் கண்டு இருந்தது. தோரணங்கள், வண்ணக்கோலங்கள் மற்றும் பாரம்பரிய ஆடைகளில் வலம் வந்த ஆண், பெண்களால் மும்பை நகரமே வண்ணமயமாக காட்சி அளித்தது.
மாநிலம் முழுவதும் கொண்டாட்டம்
மும்பை தவிர தானே, புனே மற்றும் மாநிலம் முழுவதும் நேற்று மராத்தி புத்தாண்டு வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மராத்தி புத்தாண்டையொட்டி நேற்று துறைமுக வழித்தடத்தில் நடைபெற இருந்த பராமரிப்பு பணிகள் ரத்து செய்யப்பட்டன. எனவே நேற்று சி.எஸ்.எம்.டி. - பன்வெல் இடையே மின்சார ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டது.
இதனால் பயணிகள் சிரமமின்றி நவிமும்பையில் இருந்து மும்பை வந்து செல்ல முடிந்தது.

Related Tags :
Next Story