உல்லாஸ்நகரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலி மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்
உல்லாஸ்நகரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
அம்பர்நாத்,
உல்லாஸ்நகரில் குடியிருப்பு பகுதியில் புகுந்த சிறுத்தைப்புலியை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
சிறுத்தைப்புலி
தானே மாவட்டம் உல்லாஸ்நகர் கேம்ப் 5-ம் பகுதியில் சோனாலி கிளாசஸ் என்ற டியூசன் மையம் உள்ளது. நேற்று காலை 11 மணி அளவில் அந்த டியூசன் மைய கட்டிட வளாகத்துக்குள் சிறுத்தைப்புலி ஒன்று நடமாடி கொண்டிருந்தது. இதை பார்த்து அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
பயந்துபோன அவர்கள் ஓடிச்சென்று டியூசன் மையத்தின் கதவுகளை மூடினர்.
இந்தநிலையில், அங்கிருந்து ஓடிய சிறுத்தைப்புலி குடியிருப்பு பகுதிக்குள் புகுந் தது. இதை பார்த்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அலறி அடித்து கொண்டு ஓட்டம் பிடித்தனர். வீடுகளுக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டனர். இதனால் அந்த பகுதியே பெரும் பரபரப்பானது.
மயக்க ஊசி செலுத்தி...
சிறுத்தைப்புலி புகுந்தது பற்றி போலீசார் மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் போலீசாரும், வனத்துறையினரும் அங்கு விரைந்து வந்தனர். அப்போது சிறுத்தைப்புலி அங்குள்ள ஒரு வீட்டின் வளாகத்தில் படுத்து கொண்டிருந்தது.
அந்த வீட்டின் முன் ஏராளமானவர்கள் திரண்டு விட்டனர். போலீசார் அவர்களை கட்டுப்படுத்தினார்கள். இந்த நிலையில், சிறுத்தைப்புலி மீது வனத்துறை டாக்டர் ஒருவர் மயக்க ஊசி செலுத்தினார். இதன் காரணமாக சிறிது நேரத்தில் அந்த சிறுத்தைப்புலி மயங்கியது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிறுத்தைப்புலியை அங்கிருந்து சஞ்சய் காந்தி தேசிய பூங்காவுக்கு வேனில் ஏற்றி கொண்டு சென்றனர்.
இதன்பின்னரே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

Related Tags :
Next Story