கட்டுமான பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும் ஐ.என்.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம்


கட்டுமான பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை நீக்க வேண்டும் ஐ.என்.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 19 March 2018 3:30 AM IST (Updated: 19 March 2018 5:06 AM IST)
t-max-icont-min-icon

கட்டுமான பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை நீக்க வேண்டும் என்று ஐ.என்.டி.யு.சி. கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

ஈரோடு,

இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரசின் (ஐ.என்.டி.யு.சி.) மாநில செயற்குழு கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட தலைவர் கே.ஆர்.தங்கராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சிவானந்தம் முன்னிலை வகித்தார்.

மாநில தலைவர் ஜி.காளன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

உப்பள தொழிலாளர்களுக்கு மழை காலங்களில் நிவாரண தொகை வழங்கவேண்டும். ஐ.என்.டி.யு.சி. சார்பில் வருகிற ஆகஸ்டு மாதம் புது டெல்லியில் கருத்தரங்கம் நடக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடியில் இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்ட மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருட்கள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி.யை (சரக்கு மற்றும் சேவை வரி) மத்திய அரசு உடனே நீக்க வேண்டும். கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கவேண்டும். ரேஷன் கடை தொழிலாளர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் ஆதிகேசவன், பொருளாளர் பன்னீர்செல்வம், துணைத்தலைவர் சீனிவாசன், மாவட்ட துணைத்தலைவர் தங்கராசு, மகளிர் அணி பொறுப்பாளர் துளசிமணி உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Next Story