மருத்துவத் துறையில் டெக்னீசியன் வேலை


மருத்துவத் துறையில் டெக்னீசியன் வேலை
x
தினத்தந்தி 19 March 2018 3:18 PM IST (Updated: 19 March 2018 3:18 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு வாரியம் ரேடியோ தெரபி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப உள்ளது.

மிழ்நாடு மருத்துவ சேவைப் பணிகள் தேர்வு வாரியம் (டி.என். எம்.ஆர்.பி.) தற்போது ரேடியோ தெரபி டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 25 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 1-7-2018-ந் தேதியில் 57 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ‘ரேடியோதெரபி டெக்னாலஜி’ டிப்ளமோ படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் ரூ.500 கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.சி.ஏ., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ரூ.250 கட்டணம் செலுத்தினால் போதுமானது. விண்ணப்பிக்க கடைசி நாள் 26-3-2018-ந் தேதியாகும். 28-3-2018-ந்தேதிக்குள் வங்கி வழியே கட்டணம் செலுத்தலாம். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.tnm-rb.gov.in என்ற இணையதள பக்கத்தைப் பார்க்கலாம்.

Next Story