விமானப்படையில் வேலை
விமானப்படையில் ‘குரூப்-சி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.
இந்திய ராணுவப் பிரிவுகளில் ஒன்றான விமானப்படையில் ‘குரூப்-சி (சிவிலியன்)’ பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 54 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ‘மல்டி டாஸ்கிங் ஸ்டாப், லோயர் டிவிஷன் கிளார்க், மெஸ் ஸ்டாப், கார்பெண்டர், பெயிண்டர், சமையல்காரர், லாண்ட்ரி மேன்’ உள்ளிட்ட பிரிவில் பணியிடங்கள் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். லோயர் டிவிஷன் கிளார்க் பணிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தட்டச்சு தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்ற பணிகளுக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட மாதிரியான விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். அத்துடன் தேவையான சான்றுகளை சுய சான்றொப்பம் செய்து இணைக்க வேண்டும். விண்ணப்பம் சென்றடைய கடைசிநாள் 9-4-2018-ந் தேதியாகும். இது பற்றிய அறிவிப்பு மார்ச் 10 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் வெளியாகி உள்ளது. விரிவான விவரங்களை அதில் பார்க்கலாம்.
Related Tags :
Next Story