மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை
லக்னோ மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளது.
லக்னோ மெட்ரோ ரெயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் எக்சிகியூட்டிவ் மற்றும் நான்-எக்சிகியூட்டிவ் தரத்திலான பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது. அசிஸ்டன்ட் மேனேஜர், ஆபீஸ் அசிஸ்டன்ட், ஜூனியர் என்ஜினீயர், மெயின்டனர் உள்ளிட்ட பணியிடங்கள் உள்ளன. மொத்தம் 386 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
21 முதல் 28 வயதுக்கு உட்பட்ட விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். 1-2-2018-ந் தேதியை அடிப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப்படும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.
விண்ணப்பதாரர்கள், ஐ.டி.ஐ., டிப்ளமோ என்ஜினீயரிங், பி.இ, பி.டெக். படித்தவர்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு பணியிடங்கள் உள்ளன.
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.500-ம், மற்றவர்கள் ரூ.200-ம் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பிக்கலாம். 27-3-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். இது பற்றிய விவரங்களை http://www.lm-r-cl.com / இணையதளத்தில் பார்க்கலாம்.
இதேபோல பெங்களூரு மெட்ரோ ரெயில் நிறுவனத்திலும் பொது மேலாளர், துணை பொது மேலாளர், மேலாளர், உதவி மேலாளர் போன்ற பணிகளுக்கு 33 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. என்ஜினீயரிங் சார்ந்த பட்டப்படிப்பு, சி.ஏ. படித்து, பணி அனுபவம் உள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இது பற்றிய விவரங்களை bm-rc.co.in இணைய தளத்தில் பார்த்துவிட்டு 28-3-2018-ந் தேதிக் குள் விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.
Related Tags :
Next Story