நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலை
x
தினத்தந்தி 19 March 2018 10:29 AM GMT (Updated: 19 March 2018 10:29 AM GMT)

என்.எல்.சி. பொதுத்துறை நிறுவனங்களில் இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சுருக்கமாக என்.எல்.சி. எனப்படுகிறது. பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான இது, தற்போது இண்டஸ்ட்ரியல் டிரெயினி (நிதி) பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

1-3-2018-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டு களும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப் படும். மாற்றுத் திறனாளிகளுக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை பிரிவுக்கு ஏற்ப வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது. இன்டர்மீடியட் (பிளஸ்-2) படித்துவிட்டு, ஐ.சி.ஏ.ஐ. படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 27-3-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.nlcindia.com என்ற இணைய தள முகவரியைப் பார்க் கவும். 

Next Story