இஸ்ரோ மையத்தில் டெக்னீசியன் வேலை


இஸ்ரோ மையத்தில் டெக்னீசியன் வேலை
x
தினத்தந்தி 19 March 2018 4:04 PM IST (Updated: 19 March 2018 4:04 PM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் விஞ்ஞானி வேலைக்கு 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

ந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் சுருக்கமாக இஸ்ரோ (IS-RO) என்று அழைக்கப்படுகிறது. இதன் கீழ் செயல்படும் ‘ஸ்பேஸ் அப்ளிகேசன் சென்டர்’ நிறுவனம் தற்போது ‘டெக்னீசியன்-பி’ மற்றும் சயின்டிஸ்ட்/என்ஜினீயர் உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரி உள்ளது. மொத்தம் 85 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இவை காண்டிராக்டு அடிப்படையிலான பணிகளாகும். இதில் டெக்னீசியன் பணிக்கு மட்டும் 78 இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடைந்த வர்களாக இருக்க வேண்டும். அதிகபட்சம் 35 வயதுடையவர்களுக்குப் பணிகள் உள்ளன. 2-4-2018-ந் தேதியை அடைப்படையாகக் கொண்டு வயது வரம்பு கணக்கிடப் படுகிறது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி :

டெக்னீசியன் பணிக்கு மெட்ரிகுலேசன் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.டி.சி., என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். சயின்டிஸ்ட் பணிக்கு பி.இ., பி.டெக், எம்.இ., எம்.டெக் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். 8,10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு சமையல்காரர், சமையல் உதவியாளர் பணிகள் உள்ளன.

தேர்வு செய்யும் முறை:

எழுத்துத் தேர்வு, திறமைத் தேர்வு, நேர் காணல் ஆகியவற்றில் அந்தந்த பணிக்கு அவசியமான தேர்வுகள் பின்பற்றப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 2-4-2018-ந் தேதியாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.sac.gov.in, http s ://recruitment.sac.gov.in ஆகிய இணையதள பக்கங் களைப் பார்க்கலாம். 

Next Story