எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 755 பணியிடங்கள்


எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் 755 பணியிடங்கள்
x
தினத்தந்தி 19 March 2018 11:06 AM GMT (Updated: 19 March 2018 11:06 AM GMT)

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் நர்சிங் படித்தவர்களுக்கு 755 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

கில இந்திய மருத்துவ விஞ்ஞான மையம் சுருக்கமாக ‘எய்ம்ஸ்’ (AIIMS) என்று அழைக்கப்படுகிறது. இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் இதன் மருத்துவமனை - கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது பல்வேறு இடங்களில் உள்ள எய்ம்ஸ் மையங்களில் கற்பித்தல் மற்றும் கற்பித்தல் சாராத பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளன. குறிப்பாக ஜோத்பூரில் உள்ள எய்ம்ஸ் மையத்தில் அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீஸர் மற்றும் நர்சிங் ஆபீசர் பணிகளுக்கு 755 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் ‘நர்சிங் ஆபீசர்’ பணிக்கு மட்டும் 600 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் நர்சிங் ஆபீசர் பணிக்கு 127 இடங்களும், அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு 28 இடங்களும் உள்ளன. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்கள் வருமாறு...

ஸ்டாப் நர்ஸ்

விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் வயது வரம்பு வேறுபடுகிறது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்க்கலாம். குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி:

அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட், சீனியர் நர்சிங் ஆபீசர் பணி விண்ணப்பதாரர்கள் பி.எஸ்சி. நர்சிங் பட்டப்படிப்பு படித் திருக்க வேண்டும். நர்சிங் ஆபீசர் பணிக்கு பி.எஸ்சி. (ஹான்ஸ்) நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் தகுதியாக கேட்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யும் முறை:

அசிஸ்டன்ட் நர்சிங் சூப்பிரண்டன்ட் பணிக்கு நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். சீனியர் நர்சிங் ஆபீசர், நர்சிங் ஆபீசர் பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsjodhpur.edu.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 8-4-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை மேற்குறிப்பிட்டுள்ள இணையதள பக்கத்தில் பார்க்கலாம். அல்லது மார்ச் 10-16 தேதியிட்ட எம்ப்ளாய்மென்ட் நியூஸ் இதழில் பார்க்கலாம்.

Next Story