பயிர் காப்பீட்டு தொகை ரூ.119 கோடி வந்து உள்ளது கலெக்டர் வெங்கடேஷ் தகவல்
தூத்துக்குடி மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு தொகை இதுவரை ரூ.119 கோடி வந்து உள்ளது என்று கலெக்டர் வெங்கடேஷ் கூறினார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் வெங்கடேஷ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தூத்துக்குடியில் உணவு திருவிழா வருகிற 23, 24, 25-ந் தேதி ஆகிய 3 நாட்கள் முத்துநகர் கடற்கரை பூங்காவில் நடக்கிறது. 23-ந் தேதி மாலையில் விழா தொடங்குகிறது. அன்று பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. உணவு திருவிழாவில் 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சிறந்த உணவகங்கள் மூலம் தயாரிக்கப்படும் சிறந்த உணவு வகைகள் அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்படுகிறது. இதில் தூத்துக்குடி மட்டுமின்றி நெல்லை மாவட்டத்தில் இருந்தும் அதிக உணவகங்கள் பங்கேற்கின்றன.
24-ந் தேதி செல்லப்பிராணிகள் கண்காட்சி மற்றும் சமையல் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது. 25-ந் தேதி மருத்துவக்கல்லூரி, என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
மேலும் தூத்துக்குடியில் ஆண்டுக்கு சராசரியாக 620 மில்லி மீட்டர் மழை பெய்ய வேண்டும். கடந்த வாரம் ஒரே நாளில் 200 மில்லி மீட்டர் மழை பெய்து உள்ளது. இது 32 சதவீதம் மழை ஆகும். இதற்கு முன்பு அதிகபட்சமாக 1955-ம் ஆண்டு 188 மில்லி மீட்டரும், 2008-ம் ஆண்டு 183 மில்லி மீட்டரும் மழை பெய்து உள்ளது.
கடந்த வாரம் ஒரே நாளில் அதிக அளவில் மழை பெய்தாலும், மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக மழைநீர் எளிதில் வெளியேறி விட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் காப்பீட்டு தொகை இதுவரை ரூ.119 கோடி வந்து உள்ளது. மீதம் உள்ள பயிர்களுக்கு விரைவில் பயிர் காப்பீட்டு தொகை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டர் வெங்கடேஷ் உணவு திருவிழாவுக்கான நோட்டீசை வெளியிட்டார்.

Related Tags :
Next Story