பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்


பட்டமேற்படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு கோரி அரசு டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை,

மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக தமிழ்நாடு அரசு டாக்டர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். பட்டமேற்படிப்பில் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் மதுரை அரசு ஆஸ்பத்திரி பிரதான நுழைவு வாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசு டாக்டர்கள் சங்கத்தலைவர் டாக்டர் செந்தில் தலைமை தாங்கினார். மதுரை மாவட்ட செயலாளர் டாக்டர் ரமேஷ், பொருளாளர் டாக்டர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில் கலந்து கொண்ட டாக்டர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

இதுகுறித்து, டாக்டர் செந்தில் கூறுகையில், ‘இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னையில் வருகிற 23-ந்தேதி டாக்டர்கள் சங்க கூட்டம் நடக்கிறது. எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், போராட்டம் தீவிரப்படுத்தப்படும்’ என்றார். 

Next Story