சீர்மரபினருக்கு நிதி உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பிச்சை எடுக்கும் போராட்டம்
சீர்மரபினருக்கு நிதி உதவி கேட்டு கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடந்தது.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் நடந்தது. அதில் பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு கலெக்டர் வீரராகவராவிடம் மனு அளித்தனர். முன்னதாக, மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் வளாகத்தில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். சீர்மரப்பினர் நலச்சங்கம் சார்பில் அதன் பொருளாளர் தவமணி செல்வி தலைமையில் அந்த அமைப்பினர் கலெக்டர் அலுவலகத்தில் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், “தமிழகத்தில் சீர்மரபினர் பட்டியலில் 68 சமூகத்தினர் உள்ளனர். ஆனால் எந்த நிதி உதவியும் வழங்குவதில்லை. பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்த்து இருந்தோம். ஆனால் பட்ஜெட்டிலும் எந்த அறிவிப்பும் வெயிடப்பட வில்லை. சீர்மரபினர் சமூகத்தை சார்ந்த நிதி அமைச்சரே, நிதி ஒதுக்காதது வருத்தமாக உள்ளது. எனவே அரசின் கவனத்தை ஈர்க்க பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினோம்“ என்று கூறப்பட்டு இருந்தது.
வைகை நதி மக்கள் இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் கலெக்டர் அலுவலக வளாகத்தில் முகமூடி அணிந்து போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்தில் கழிவு நீரும், மனித கழிவுகளும், மருத்துவ கழிவுகளும் கொட்டப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அந்த இடத்தை சுகாதார பகுதியாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.
ஜமாஅதுல் உலமா பேரவை சார்பில் அதன் நிர்வாகிகள் கலெக்டரிடம் கொடுத்த கோரிக்கை மனுவில், “சக்கிமங்கலத்தில் இருந்து சிலைமான் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் வைகை ஆற்றில் இணைப்பு பாலம் போடப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் அசம்பாவித சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. எனவே இங்கு மின்விளக்குகள் அமைக்க வேண்டும்“ என்று கூறப்பட்டு இருந்தது.

Related Tags :
Next Story