வண்டலூரில் ரூ.2 கோடி செலவில் 300 வகை மரங்களுடன் மரப்பூங்கா
வண்டலூரில், ரூ.2 கோடி செலவில் 300 வகை மரங்களுடன் மரப்பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பார்வைக்கு திறக்கவேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வண்டலூர்,
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா, கடந்த 2016-ம் ஆண்டு சட்டசபையில் 110-ம் விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், 2013-முதல் 2015-ம் ஆண்டு வரை இந்திய வன அளவை நிறுவனத்தின் அறிக்கையின்படி நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களை காட்டிலும் வனம் மற்றும் மரங்கள் அடர்ந்த பரப்பளவு தமிழகத்தில்தான் மிக அதிக அளவு அதிகரித்துள்ளது.
மேலும் 5,640 பூக்கும் தாவர வகைகளை தமிழ்நாடு கொண்டுள்ளது. இவற்றில் 230 தாவர வகைகள் அழியும் தருவாயில் உள்ளன. எனவே வண்டலூர்-கேளம்பாக்கம் சாலையில் உள்ள வன ஆராய்ச்சி பிரிவு மூலமாக வன மரபியல் வளங்களை பாதுகாக்க 20 ஏக்கர் பரப்பளவில் மேற்கு தொடர்ச்சி மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வளர்ந்து வரும் 300 மரத்தாவர வகைகள் ஓரிடத்தில் வளர்க்கப்பட்டு, மரபியல் வளங்கள் கொண்ட ‘மரப்பூங்கா’, ரூ.2 கோடி மதிப்பில் வண்டலூரில் உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்தார்.
அதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை ஒட்டி அமைந்துள்ள 20 ஏக்கர் பரப்பளவில் மரப்பூங்கா அமைக்கும் பணிகளை வனத்துறை அதிகாரிகள் தொடங்கினார்கள்.
இதற்காக தமிழ்நாட்டில் உள்ள ஜவ்வாதுமலை, நீலகிரி, பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து பன்னீர்மரம், இரும்புமரம், ஈட்டி, புன்னை, செண்பகம், எட்டி, வெண்தேக்கு, மயிலடிமரம், மயிர் மாணிக்கம், மலையாத்தி, வேம்பு, பாதிரி, மாவிலங்கம், ருத்திராட்சம், சந்தனம், செம்மரம், வெடிப்பாலா, வில்லம், கடுக்காய், நெல்லி, பலா, வேங்கு, இலுப்பை, கருங்காலி, கொடுக்காய்ப்புளி, செங்கடம்பு, தவிட்டுக்கொய்யா, தும்பிலிமரம், நாவல், நீர்க்கடம்பு, நெட்டிலிங்கம், புலிநகம், பூவரசு, பெருமூங்கில், மகிழ், மஞ்சக்கடம்பு உள்பட அழியும் நிலையில் உள்ள 300 வகையான மரக்கன்றுகளை வனத்துறை அதிகாரிகள் சேகரித்து உள்ளனர்.
தற்போது மரப்பூங்காவில் கோடை காலங்களை தாங்கக்கூடிய 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் மட்டும் வரிசையாக 10 அடி இடைவெளி விட்டு அழகாக நடப்பட்டுள்ளது. சில மரக்கன்றுகள் கோடை காலம் முடிந்த பிறகு நடப்படுகிறது.
இந்த மரப்பூங்காவில் பார்வையாளர்கள் அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக குடில்கள் அமைக்கப்பட்டுள்ளது. மரப்பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள 300 வகையான மரங்களின் தகவல்கள் அனைத்தும் புகைப்பட வடிவத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைப்பதற்காக கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளது.
இந்த கட்டிடத்தில் தாவரவியல் ஆராய்ச்சியில் ஈடுபடும் மாணவர்கள் கருத்தரங்கு நடத்துவதற்கும் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. சிறுவர்கள், பொதுமக்கள் ரசித்து பார்க்கும் வகையில் மரப்பூங்காவில் செயற்கையான முறையில் அழகிய நீரூற்றும் அமைக்கப்பட்டுள்ளது. மரப்பூங்காவை சுற்றி சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது.
நம் முன்னோர்கள் காலத்தில் இருந்த பல வகையான மரங்கள் அழியும் நிலையில் உள்ளது. அதில் சில மரங்களின் பெயர்கள் மட்டுமே நமக்கு தெரியும். ஆனால் வண்டலூரில் அமைக்கப்படும் மரப்பூங்காவில் ஒரே இடத்தில் 300 வகையான மரங்களை பார்ப்பது அனைவருக்கும் மிகப்பெரிய வரமாகும்.
ஏன் என்றால், நாம் காடுகள் நிறைந்த மலைப்பகுதியில் சுற்றுலா சென்றாலும்கூட ஒரே இடத்தில் அழியும் நிலையில் உள்ள மூலிகை தன்மைகொண்ட இவ்வளவு மரங்களை நம்மால் காண இயலாது. இந்த மரப்பூங்காவில் அமைக்கப்படும் மரங்களின் பெயர்களைக்கூட தற்போது இருக்கும் தலைமுறையினர் முழுமையாக அறிந்திருக்க முடியாது.
மரப்பூங்கா மிக விரைவில் திறக்கப்பட்டால் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தாவரவியல் ஆராய்ச்சி மாணவர்களுக்கு சொர்க்க பூமியாக திகழும். இந்த மரப்பூங்கா அமைக்கும் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. ஆனால் தற்போது வரை மந்தமான நிலையில் நடைபெறுகிறது. எனவே இந்த மரப்பூங்காவின் பணிகளை வனத்துறை அதிகாரிகள் விரைவாக முடித்து, பொதுமக்கள் பார்வைக்கு திறக்க வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது.
பல்வேறு மாநிலங்கள் மற்றும் மலைப் பகுதியில் இருந்து அழியும் நிலையில் உள்ள 300 வகையான மரக்கன்றுகளை சேகரிக்கும் பணி மிகவும் சவாலாக இருந்தது. இதன் காரணமாகத்தான் மரப்பூங்கா அமைக்கும் பணி காலதாமதமானது. அப்படி இருந்தும் 300 வகையான மரக்கன்றுகள் கொண்டு வரப்பட்டு, தற்போது மரப்பூங்காவில் 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது.
ஒரு சில மரக்கன்றுகள் கோடை காலம் முடிந்த பிறகு நடுவதற்கு தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மழை காலங்களில் வீணாக ஓடும் தண்ணீரை சேகரித்து வைக்கும் வகையில் மரப்பூங்காவின் நடுவே ‘யு’ வடிவில் ஆழமான கால்வாய்கள், நெடுங்குன்றம் ஏரி வரை அமைக்கப்படுகிறது. அந்த கால்வாய்களின் நடுவில் சிறிய அளவில் தடுப்பணைகள் அமைக்கப்படுகிறது.
இந்த தடுப்பணைகளில் மழைநீர் தேங்கி நிற்கும்போது மரப்பூங்காவில் உள்ள பகுதியில் நிலத்தடிநீர் பரவும். மரங்களின் வேர்களுக்கு தண்ணீர் எப்போதும் கிடைப்பதற்கு வழிவகை செய்யும். இந்த தடுப்பணைகளில் மழைநீர் நிரம்பிய பிறகு மழைநீர் நெடுங்குன்றம் ஏரிக்கு செல்லும் வகையில் பணிகள் நடை பெறுகிறது. மரப்பூங்காவில் அனைத்து பணிகளும் இன்னும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு, மிக விரைவில் பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story