கள ஆய்வுக்கு சென்று சரியான தகவல்களை அளிக்க வேண்டும், பெண் அதிகாரிகளுக்கு கவர்னர் வேண்டுகோள்
கள ஆய்வுக்கு சென்று சரியான தகவல்களை அளியுங்கள் என்று பெண் அதிகாரிகளிடம் கவர்னர் கிரண்பெடி வேண்டுகோள் விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி பல்வேறு துறைகளை சேர்ந்த 40 பெண் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இதில் கலந்துகொண்ட பெண் அதிகாரிகள், சிறந்த போக்கு வரத்து வசதி, தனியாக கழிப்பிட வசதி, குழந்தைகளை பாதுகாக்க காப்பகம் தேவை என்று வலியுறுத்தினார்கள்.
மேலும் தங்களது திறமையை வளர்த்துக்கொள்ள பயிற்சி அளிக்கவேண்டும், தங்களது குறைகளை உயர் அதிகாரிகள் கேட்க வேண்டும். தங்களது திறமைகளை அங்கீகரிக்க வேண்டும், கலந்தாய்வு வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.
அவர்களுக்கு பதில் அளிக்கும் விதமாக பேசிய கவர்னர் கிரண்பெடி, எதற்காக துறைகளை எதிர்பார்க்கிறீர்கள்? கம்ப்யூட்டர்கள் உதவியுடன் அனைத்தையும் அறிந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார். கள ஆய்வுக்கு சென்று கள நிலவரங்களை அறிந்து சரியான தகவல்களை அரசுக்கு அளியுங்கள் என்றார்.
சில பெண் அதிகாரிகள் பேசும்போது, தங்களது குழந்தைகளை கவனிக்க வசதிகள் தேவை என்று கேட்டனர். அதற்கு கவர்னர் கிரண்பெடி, கோரிமேடு போலீஸ் வளாகத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் பிற துறைகளை சேர்ந்த பெண்களின் குழந்தைகளை கவனிக்கவும் அனுமதிக்குமாறு கூறினார். தேவைப்படும் பெண் அதிகாரிகள் கூட்டாக அலுவலகத்துக்கு செல்ல தங்கள் வசதிக்கு ஏற்ப போக்குவரத்துக்கு கார் வசதிகளை செய்துகொள்ளலாம் என்றும் கவர்னர் குறிப்பிட்டார். தங்களது குறைகளை கவர்னர் மாளிகையின் குறைகேட்கும் வாட்ஸ்அப் எண்ணுக்கு (9500560001) தெரிவிக்கலாம் என்றார். 3 மாதங்களுக்கு ஒருமுறை நாம் சந்திப்போம். மற்றவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுங்கள் என்று கவர்னர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story