திருவாரூரில் ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி திருவாரூரில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர்,
மாநில அரசின் கீழ் பணியாற்றும் டாக்டர்களுக்கு மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக ஊதியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். முதுநிலை மருத்துவ பட்ட படிப்பில் 50 சதவீதம் இட ஓதுக்கீட்டை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்து இருந்தது.
அதன்படி நேற்று திருவாரூரில் உள்ள அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனை முன்பு தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் லெனின் தலைமை தாங்கினார். செயலாளர் சுரேஷ், பொருளாளர் சிவபாலன், மருத்துவ அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மணவழகன், இணை செயலாளர் கிரண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோரிக்கை அட்டை
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட டாக்டர்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக கோரிக்கைகள் எழுதப்பட்ட அட்டையை அணிந்திருந்தனர்.

Related Tags :
Next Story