கடலூரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி
கடலூரில் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.
கடலூர்,
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி கடலூரில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தண்டாபணி முன்னிலையில் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் 25 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 71 ஆயிரம் மதிப்பில் 3 சக்கர வாகனங்களை வழங்கினார்.
இதில் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன், செய்தி-மக்கள் தொடர்பு அதிகாரி ரவிச்சந்திரன் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.முன்னதாக கடலூர் முதுநகர் அருகே உள்ள ராசாப்பேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி தம்பதி சிவபாலன்-இலக்கியா ஆகியோர் 3 சக்கர வாகனம் கேட்டு கடந்த 3 ஆண்டுகளாக மனு கொடுத்து வருவதாகவும், ஆனால் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என கூறி அதிகாரிகளிடம் திடீர் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இதை அறிந்த அமைச்சர் எம்.சி.சம்பத் மாற்றுத்திறனாளி தம்பதியரை கடலூர் விருந்தினர் மாளிகைக்கு நேரில் வரவழைத்து 3 சக்கர வாகனம் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளி தம்பதி அமைச்சருக்கு நன்றி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுசென்றனர்.
Related Tags :
Next Story