விடைத்தாளை நிரப்பத் தெரியாத மாணவர்கள்
பீகார் பள்ளி மாணவர்களுக்கு விடைத்தாளைக்கூட நிரப்பத் தெரியாமல் இருப்பது தெரியவந்தது.
பீகாரில் பள்ளி மாணவர்களுக்கான ‘இன்டர்மீடியட்’ தேர்வு கள் நடந்து முடிந்துள்ளன. விடைத்தாள் திருத்தும் பணி தொடங்கி உள்ளது. அப்போது ஏராளமான மாணவர்கள் விடைத்தாளைக்கூட நிரப்பத் தெரியாமல் இருப்பது தெரியவந்தது. அங்கு 50 சதவீத கேள்விகள் கொள்குறி வகையில் (ஆப்ஜெக்டிவ்) கேட்கப்பட்டிருந்தன. அதற்கான விடையை தேர்வு செய்து குறிக்க விடைத்தாளான ஓ.எம்.ஆர். சீட்டில் முதல்பக்கம் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியில் பெயர் மற்றும் பதிவு எண் எழுதவும் இடம் ஒதுக்கப்பட்டிருந்தது. விடைத்தாளின் 2-வது பக்கத்தில் ஆசிரியர் மதிப்பீடு செய்து மதிப்பெண் வழங்க ஒதுக்கப்பட்டிருந்தது. 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கள் பெயர் மற்றும் ரோல் நம்பர் எழுத வேண்டிய இடத்தை மாற்றிக் குறிப்பிட்டிருந்தார்கள். இதுபோல் விடைகளை குறிப்பதிலும் தவறு செய்திருந்தனர். ஆசிரியர்கள் ஏற்கனவே விளக்கம் அளித்திருந்தும் நிறைய மாணவர்கள் இந்தத் தவறைச் செய்திருப்பது கல்வி அதிகாரிகளுக்கு அதிர்ச்சியைத் தந்துள்ளது. விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு குழப்பத்தையும் ஏற்படுத்தியது. அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி ஆலோசித்து வருகிறார்கள்.
Related Tags :
Next Story