ஆண்ட்ராய்டு வியர் ஓ.எஸ்.
கூகுள் தனது இயங்குதளங்களை ‘வியர் ஓ.எஸ். (Wear OS) என்று மாற்றி வெளியிடுகிறது.
கூகுள் ஸ்மார்ட்போன் மற்றும் எலக்ட்ரானிக் கருவிகளுக்கான இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு என்ற பெயரில் வழங்கி வருகிறது. எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட பல கருவிகள் உடலில் அணிந்து கொள்ளும் அணிகருவிகளாக உருமாற்றம் அடையும் என்று நம்பப்படுகிறது. கூகுள் தனது இயங்குதளத்தையும் வருங்கால கருவிகளுக்கான சிறப்பம்சங்களுடன் உருவாக்கி இருப்பதுடன், அதன் பெயரையும் ‘வியர் ஓ.எஸ். (Wear OS) என்று மாற்றி வெளியிடுகிறது. கருவியில் அடங்கியுள்ள தொழில்நுட்பத்தை பெயர் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக இந்தப் பெயரை சூட்டியிருப்பதாக அதிகாரிகள் கூறி உள்ளனர். வியர் இயங்குதளம் கொண்ட கூகுள் வியர் ஸ்மார்ட்வாட்சுகள் இந்த வாரத்தில் வெளிவருகின்றன.
Related Tags :
Next Story