தூத்துக்குடியில் பாலியல் தொழில் புகார் விதவை பெண்ணுடன் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு


தூத்துக்குடியில் பாலியல் தொழில் புகார் விதவை பெண்ணுடன் சிக்கிய சப்-இன்ஸ்பெக்டரால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 March 2018 2:30 AM IST (Updated: 20 March 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில், ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், விதவை பெண்ணுடன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் பாலியல் தொழில் நடப்பதாக வந்த புகாரின் பேரில், ஒரு வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியதில், விதவை பெண்ணுடன் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாலியல் தொழில் புகார்


தூத்துக்குடி தாளமுத்துநகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக தாளமுத்துநகர் போலீசுக்கு நேற்று மதியம் அந்த பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டுக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது, அந்த வீட்டில் ஒரு பெண்ணும், தூத்துக்குடியில் உள்ள போலீஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றி வரும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரும் இருந்தனர்.

அந்த சப்-இன்ஸ்பெக்டருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் இருக்கின்ற நிலையில், அவர் இந்த பெண்ணுடன் இருந்தது சோதனைக்கு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து 2பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அம்பலப்படுத்திய பொதுமக்கள்

விசாரணையில்,‘ அந்த பெண், கணவனை இழந்து, 2 பெண் குழந்தைகளுடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார். அவருக்கும் இந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் இடையே சில ஆண்டுகளுக்கு முன்பு கள்ளத்தொடர்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் அடிக்கடி அந்த பெண்ணின் வீட்டுக்கு அவர் வந்து சென்றுள்ளார். இதை அறிந்த அப்பகுதி மக்கள், இருவரின் கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தவே போலீசாருக்கு தகவல் கொடுத்ததும் தெரிய வந்தது. ஆனால், அந்த பெண்ணின் குடும்பத்தை தற்போது தான் கவனித்து வருவதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து 2 பேரையும் போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story