புதியம்புத்தூரில் தி.மு.க.வினர் சாலை மறியல்; 44 பேர் கைது
புதியம்புத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டப்பிடாரம்,
புதியம்புத்தூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 44 பேரை போலீசார் கைது செய்தனர்.
போராட்டம்
ரத யாத்திரைக்கு அனுமதியளித்த தமிழக அரசை கண்டித்து சென்னையில் சட்டபேரவை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டம் செய்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர். அதற்கு கண்டனம் தெரிவித்தும், ரத யாத்திரைக்கு தடை விதிக்க வலியுறுத்தியும் ஓட்டப்பிடாரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சண்முகையா தலைமையில் புதியம்புத்தூர் பஸ் நிலையம் முன்பு தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
44 பேர் கைது
இந்த போராட்டத்தில் நகர செயலாளர் லிங்கராஜ், மாவட்ட மகளிர் அணி துணை அமைப்பாளர் ஜெயா, ஒன்றிய ஆதிதிராவிட அமைப்பாளர் சுகுமார், மாவட்ட தொண்டரணி மாடசாமி, மாவட்ட பிரதிநிதி ஜோசப்மோகன், ஊராட்சி கழக செயலாளர் சிதம்பரம் வேலுசாமி, அருள்ராஜ், பூவலிங்கம், செல்வராஜ், ஞானதுரை, செல்வின், அம்மாசி, சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 44 தி.மு.க.வினரை புதியம்புத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
Next Story