ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை
ராமநாதபுரத்தில் பா.ஜ.க. பிரமுகர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். துக்கம் தாங்காத மனைவி தன்னைத்தானே கத்தியால் குத்திக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
பனைக்குளம்,
ராமநாதபுரத்தை அடுத்துள்ள பட்டணம்காத்தான் சுப்பையா நகரை சேர்ந்தவர் பாலமுரளி (வயது 30). இவர் பா.ஜ.க. மாவட்ட இளைஞரணி பொருளாளராக பதவி வகித்து வந்தார். இவருக்கு தனலட்சுமி என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.
காய்கறி கடை நடத்தி வந்த பாலமுரளி தற்போது ஓம்சக்தி நகரில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தார். இந்த நிலையில் பாலமுரளி சொந்தமாக இடம் வாங்குவதற்கு பத்திரம் பதிவு செய்ய முடியாமல் அவர் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
மேலும் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த பாலமுரளி நள்ளிரவில் வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக கதவை திறக்காததால் சந்தேகமடைந்த மனைவி, வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது கணவன் தூக்கில் தொங்குவதை கண்டு பார்த்து அலறினார்.
அதைத்தொடர்ந்து பாலமுரளியின் சகோதரர்கள் கண்ணதாசன், விஜயபாபு ஆகியோருக்கு தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் வந்து கேணிக்கரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையே, கணவன் இறந்த துக்கம் தாங்காமல் தனலட்சுமி கத்தியால் தன்னைத்தானே குத்திக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்து தடுத்த உறவினர்கள் காயமடைந்த அவரை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தகவல் அறிந்ததும் பா.ஜ.க. மாவட்ட செயலாளர் ஆத்மா கார்த்திக் உள்பட கட்சி நிர்வாகிகள் வந்து பாலமுரளியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Related Tags :
Next Story