கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி பலி
ஊட்டியில் கட்டுமான பணியின் போது மண்ணுக்குள் புதைந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி வண்டிச்சோலையில் உள்ள பழைய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகே சந்திரன் என்பவர் வீடு கட்டி வருகிறார். வீடு கட்டும் பணிக்காக அஸ்திவாரம் போடப்பட்டு, தூண்கள் அமைக்கப்பட்டு உள்ளது.கட்டுமான பணியில் நேற்று தலைகுந்தா அருகே உள்ள அத்திக்கல் கிராமத்தை சேர்ந்த தொழிலாளர்கள் துரைராஜ் (வயது 50), நாகராஜ் உள்பட 10 பேர் ஈடுபட்டு இருந்தனர். வீடு கட்டும் போது அஸ்திவாரத்திற்காக மண் எடுத்து இருந்ததால், அருகே இருந்த மண் திட்டு விழும் நிலையில் இருந்தது.
இந்த நிலையில் நேற்று மதியம் 1 மணியளவில் தொழிலாளர்கள் கட்டுமான பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர். துரைராஜ் மண்வெட்டி எடுப்பதற்காக மண் திட்டு அருகே சென்றார். ஊட்டியில் பெய்த தொடர் மழையால் ஈரமாக இருந்த மண் திட்டு திடீரென துரைராஜ் மீது சரிந்து விழுந்தது.இதில் அவர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தார். அவர் வெளியே வர முடியாமல் மூச்சுத்திணறி உயிருக்கு போராடினார். இந்த சம்பவத்தை நேரில் பார்த்த மற்ற தொழிலாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் மண்ணில் சிக்கி உயிருக்கு போராடிய துரைராஜை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த நீலகிரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சுப்பிரமணியம், ஊட்டி தீயணைப்பு நிலைய அதிகாரி சேகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். துரைராஜ் மீது மண் மற்றும் கற்கள் விழுந்து இருந்ததால், அவர் எங்கு இருக்கிறார் என்று கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. உடனே பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மண் அகற்றப்பட்டது. அப்போது துரைராஜ் அணிந்திருந்த சட்டை வெளியே தெரிந்தது.
அதனை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் மண்வெட்டிகள் மூலம் மண்ணை அகற்றி, கற்களை எடுத்தனர். துரைராஜின் தலை வெளியே தெரிந்தது. உடனே மீட்பு பணியை துரிதப்படுத்தி தீயணைப்பு வீரர்கள் மண்ணில் புதைந்த துரைராஜை மீட்ட போது அவர் இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து ஊட்டி நகர மத்திய போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story