ஊட்டி ரெயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட நீராவி என்ஜின் புதுப்பொலிவு பெறுகிறது
ஊட்டி ரெயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்ட பாரம்பரிய நீராவி என்ஜின் புதுக்பொலிவு பெறுகிறது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் 1908-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15-ந் தேதி குன்னூரில் இருந்து ஊட்டிக்கு நீராவி என்ஜின் மூலம் முதல் முறையாக மலை ரெயில் இயக்கப்பட்டது. நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை ரெயிலில் பயணம் செய்யும் போது, அடர்ந்து வளர்ந்த பசுமையான மரங்கள், கேத்தி பள்ளத்தாக்கு, குகைகள் போன்றவற்றை கண்டு ரசிப்பது ஒரு இனிமையான அனுபவம் ஆகும்.
ஒரு முறையாவது மலை ரெயிலில் பயணம் செய்ய வேண்டும் என்று விரும்பி சுற்றுலா பயணிகள் ஊட்டி மலை ரெயிலில் பயணம் செய்து வருகின்றனர். அவர்களது நினைவில் நீங்கா இடம் பெற்றது மலை ரெயில். எனவே, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் மலை ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். கடந்த 2005-ம் ஆண்டு யுனெஸ்கோ நிறுவனம் ஊட்டி, குன்னூர் ரெயில் நிலையம் மற்றும் குன்னூர்-ஊட்டி இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்துக்கு பாரம்பரிய அந்தஸ்து வழங்கியது.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் வரை நீராவி பர்னஸ் என்ஜின் மூலமும், குன்னூரில் இருந்து ஊட்டிக்கு டீசல் என்ஜின் மூலமும் மலை ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ஊட்டி ரெயில் நிலையத்தின் உள்பகுதியில் ரூ.15 லட்சம் மதிப்பில் மேடை மற்றும் தண்டவாளம் அமைக்கப்பட்டு, நூற்றாண்டு பழமை வாய்ந்த பாரம்பரியம் மிக்க மலை ரெயிலின் நீராவி என்ஜின் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் கிரேன் மூலம் நடைபெறாமலும், முழுக்க முழுக்க ரெயில்வே பணியாளர்கள் மூலமே நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இது கடந்த 1918-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே மலை ரெயிலில் இயங்கி வந்த நீராவி என்ஜின் ஆகும். மலை ரெயிலின் பாரம்பரியத்தை பாதுகாக்கும் வகையில், ஊட்டி ரெயில் நிலையத்தில் உள்ள நடைபாதை இன்று வரைக்கும் பழமை மாறாமல் உள்ளது. கோடை சீசன் தொடங்க உள்ள நிலையில், ஊட்டி ரெயில் நிலையத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கும் நீராவி என்ஜினை பொலிவுப்படுத்தும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
கோடை சீசனையொட்டி, ஊட்டி மலை ரெயிலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பயணம் செய்வார்கள். அப்போது சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையிலும், நீராவி என்ஜின் குறித்து தெரிந்துகொள்ளும் வகையிலும் பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் வகையில் நீலம், கருப்பு, சிவப்பு நிறங்களில் வர்ணம் பூசும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும் வகையில் அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

Related Tags :
Next Story