மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து 10 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல்
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்து மாவட்டத்தில் 10 இடங்களில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர்.
சிவகங்கை,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் சார்பில் ராமராஜ்ஜிய ரத யாத்திரை வருகைக்கு தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, த.மு.மு.க. உள்ளிட்ட கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நேற்று நடைபெற்ற சட்டசபையிலும் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியால் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டனர். இதனையடுத்து மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை போலீசார் கைதுசெய்தனர். மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சிவகங்கை அரண்மனைவாசலில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் மணிமுத்து தலைமையில் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் அயூப்கான், ஜெயகாந்தன், வீனஸ் ராமநாதன், மாவட்ட மகளிரணி அமைப்பாளர் பவானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இதனையடுத்து மறியல் செய்த 50 பேரை டவுன் போலீசார் கைதுசெய்தனர்.
காரைக்குடியில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் தென்னவன் தலைமையில் நகர செயலாளர் குணசேகரன், சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சுப.முத்துராமலிங்கம், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பாலசுப்பிரமணியன், ஆனந்தன், சொக்கு, காங்கிரஸ் சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், சங்கராபுரம் முன்னாள் ஊராட்சி தலைவர் மாங்குடி, மாவட்ட செயலாளர் குமரேசன், தி.க. சார்பில் சாமி.திராவிடமணி, விடுதலைச் சிறுத்தைகள் சங்கு உதயகுமார், இளையகவுதமன் உள்பட 150 பேரை போலீசார் கைதுசெய்தனர்.
இதேபோல் மானாமதுரையில் தேவர் சிலை அருகே ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, ராஜாமணி, நகர செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை மானாமதுரை போலீசார் கைதுசெய்தனர்.
இளையான்குடி கண்மாய்க்கரையில் ஒன்றிய செயலாளர் சுப.மதியரசன் தலைமையில் பேரூர் செயலாளர் நஜூமுதீன், மாவட்ட நெசவாளரணி முருகானந்தம், நிர்வாகிகள் பெரியசாமி, அய்யாச்சாமி, மலைமேகு, மாவட்ட சிறுபான்மை பிரிவு நாசர், மாவட்ட தொண்டரணி புலிக்குட்டி உள்ளிட்டோர் மறியல் செய்தனர். இதேபோல் திருப்புவனம் நரிக்குடி முக்கு பகுதியில் மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமையில் ஒன்றிய செயலாளர்கள் கடம்பசாமி, வசந்திசேங்கைமாறள் உள்பட 40 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் காளையார்கோவில், சருகணி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி உள்ளிட்ட 5 இடங் களிலும் மறியல் நடைபெற்றது.

Related Tags :
Next Story