ராமராஜ்ய ரத யாத்திரையை எதிர்த்து அரசியல் கட்சியினர் போராட்டம்
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் சாலைமறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். மறியலில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரளா மாநிலத்தில் இருந்து நேற்று தமிழகம் வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் நேற்று தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தின. அந்த வகையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணாசாலையில் உள்ள தாராபூர் டவர் அருகே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.), மனிதநேய மக்கள் கட்சியினர் நேற்று காலை 11 மணியளவில் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
இருப்பினும், அவர்கள் கலைந்து செல்லாமல் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 20 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து போலீசார், சாலைமறியலில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
இதேபோல், அண்ணாசாலையில் உள்ள அண்ணாசிலை அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சுமார் 30-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை எதிர்த்து போராடிய எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் தெஹ்லான் பாகவி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்தும் சென்னை பாரிமுனையில் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் எஸ்.அமீர் அம்சா, மாநில ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.கரீம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றிச்சென்றனர்.
சென்னை ராயபுரம் மேம்பாலம் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் அன்புசெழியன், ஆர்.கே.நகர் பகுதி செயலாளர் சவுந்தர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர், ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் சாலையில் படுத்துக்கொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர். அவர்கள் அனைவரையும் ராயபுரம் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர்.
பல்லாவரத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் சமது தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
இதே போல், தாம்பரம் பஸ் நிலையத்தில் திராவிடர் கழகத்தினர் மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அனைவரையும் போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் தங்கவைத்தனர்.
பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் அகரம் சந்திப்பில் உள்ள காமராஜ் சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை செயலாளர் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் மாவட்ட துணை செயலாளர் செங்கொடி உள்பட பலர் சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பெரம்பூர் தொகுதி செயலாளர் கல்தூண் ரவி தலைமையில் பெண்கள் உள்பட 40 பேர் வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி சாலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சைதாப்பேட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தி.மு.க.வினரை போலீசார் கைது செய்தனர்.
ஓட்டேரி பாலம் புளியந்தோப்பு கோகினூர் சந்திப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை ஆகிய இடங்களில் போராட்டம் நடைபெற்றது.
மணலியில் தி.மு.க. மாவட்ட வர்த்தகர் அணி தலைவர் ஏ.வி. ஆறுமுகம், அவைத்தலைவர் துரை ஆகியோர் தலைமையில் மணலி மார்க்கெட் அருகே, காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட தி.மு.க.வினர் 70 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
இதேபோல் அம்பத்தூர் பஸ் நிலையம், உழவர் சந்தை, கொரட்டூர் சிக்னல், வில்லிவாக்கம் நாதமுனி திரையரங்கம் ஆகிய பகுதிகளில் தி.மு.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆலந்தூர் தெற்கு பகுதி தி.மு.க. செயலாளர் என்.சந்திரன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் ஊர்வலமாக வந்து வாணுவம்பேட்டை மேடவாக்கம் நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை அழைத்து செல்ல போலீஸ் வாகனங்கள் இல்லாததால் கீழ்கட்டளையில் இருந்து தியாகராயநகருக்கு சென்ற மாநகர பஸ்சில் இருந்த பயணிகளை கீழே இறக்கிவிட்டு அந்த பஸ்சில் தி.மு.க.வினரை ஏற்றி சென்று ஆதம்பாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.
இதேபோல் ஆலந்தூரில் முன்னாள் கவுன்சிலர் குணா, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை செயலாளர் கோல்டு பிரகாஷ் ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் சாலை மறியல் செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். மேலும் பெருங்குடி, பள்ளிக்கரணை போன்ற பகுதிகளிலும் சாலை மறியலில் ஈடுப்பட்ட தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர்.
அதே போல் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சீபுரம் மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சி தலைவர் பிலால் தலைமையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் சாலையில் அணிவகுத்து நின்றன. இது பற்றி தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி மற்றும் போலீசார் வந்து சமரசம் பேசினார்கள். பின்னர் அவர்கள் சாலையோரம் நின்று ஆர்ப்பாட்டம் செய்துவிட்டு கலைந்து சென்றனர்.
இப்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் சாலைமறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story