ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டம்
ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சியில் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 310 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி விசுவ இந்து பரிஷத் சார்பில் ராம ராஜ்ய ரத யாத்திரை உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து தொடங்கியது. இந்த ரதயாத்திரை குழுவினர் கேரள மாநிலம் வழியாக நேற்று தமிழகத்தில் திருநெல்வேலி மாவட்டத்திற்கு வந்தனர். ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தடை விதிக்க வேண்டும், தமிழகத்தில் இந்த யாத்திரைக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யவேண்டும் என கோரி நேற்று தமிழகம் முழுவதும் பரவலாக அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
நேற்று தமிழக சட்டசபையிலும் இந்த பிரச்சினையை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் எழுப்பினர். இதையடுத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். பின்னர் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தலைமை செயலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து மு.க.ஸ்டாலின் உள்பட தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.
மு.க.ஸ்டாலின் கைது செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் திருச்சி மத்திய பஸ் நிலையம் பெரியார் சிலை அருகில் நேற்று மதியம் தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு மாநகர தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். ராமராஜ்ய ரதயாத்திரைக்கு எடப்பாடி அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்யவேண்டும், ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்ததற்காக கைது செய்யப்பட்ட தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலினை உடனே விடுதலை செய்யவேண்டும் என கோரி அவர்கள் மறியல் செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த போராட்டம் தொடர்பாக 200 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்துக்கு கொண்டு சென்றனர்.
பாலக்கரை ரவுண்டானா அருகில் நேற்று காலை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தினர் ரதயாத்திரைக்கு தடை விதிக்க கோரி மறியல் போராட்டம் நடத்தினார்கள். மாவட்ட தலைவர் முகமது ரபீக் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 52 பேரை போலீசார் கைது செய்தனர்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திருச்சி மத்திய பஸ் நிலையம் அருகில் சாலை மறியல் செய்தனர். கட்சியின் கொள்கை பரப்பு மாநில துணை செயலாளர் முருகன் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டம் தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்தனர். எஸ்.டி.பி.ஐ கட்சியினர் டி.வி.எஸ். டோல்கேட் அருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதனையொட்டி கட்சியின் மாவட்ட செயலாளர் அசன் இமாம் உள்பட 31 பேரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Tags :
Next Story