முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததன் எதிரொலி: குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்
முல்லைப்பெரியாற்றில் நீர்வரத்து குறைந்ததன் எதிரொலியாக உறைகிணறுகள் அமைந்துள்ள இடங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உத்தமபாளையம்,
தேனி மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளின் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு உள்ளது. இதனால் ஆற்றுப்பகுதியில் உறை கிணறுகள் அமைத்து அதில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது.
குறிப்பாக உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் கோவில் அருகே முல்லைப்பெரியாற்றில் உறை கிணறுகள் அமைத்து உத்தமபாளையம், தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் மற்றும் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் உள்ள 13 ஊராட்சிகளுக்கும், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14 கிராம ஊராட்சிகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது பருவமழை பொய்த்து போனதால் முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் அணையில் இருந்து ஆற்றுக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு 200 கனஅடியாக குறைந்து விட்டது. இதனால் உறைகிணறுகள் அமைக்கப்பட்ட இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
முல்லைப்பெரியாற்றில் கூடுதல் தண்ணீர் திறக்கும் போது ஆற்றில் கலக்கும் கழிவுநீர் அடித்துசெல்லப்பட்டு விடும். தற்போது தண்ணீர் குறைந்ததால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரை சுத்திகரிப்பு செய்யும் போது தேவையான அளவு குளோரின் கலந்து பொதுமக்களுக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால் வயிற்று போக்கு. மஞ்சள்காமலை, உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எனவே மாவட்ட நிர்வாகம், உறை கிணறுகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யும் உள்ளாட்சி அமைப்புகள் குளோரினேசன் செய்து குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story