கர்நாடக சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு


கர்நாடக சட்டசபை தேர்தல்: ஆம் ஆத்மி கட்சி சார்பில் 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 21 March 2018 2:45 AM IST (Updated: 21 March 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி சார்பில் 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி சார்பில் 18 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

முதல் வேட்பாளர் பட்டியல்

கர்நாடக சட்டசபைக்கு மே மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. ஜனதா தளம்(எஸ்) ஏற்கனவே 125 தொகுதிகளுக்கான முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் பொதுச் செயலாளரும், கர்நாடக மேலிட பொறுப்பாளருமான பங்கஜ் குப்தா பெங்களூருவில் நேற்று 18 தொகுதிகளுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஊழல் மிகுந்த மாநிலம்

எங்கள் கட்சி சார்பில் முதல் கட்டமாக 18 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளோம். இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலம் கர்நாடகம் தான். நாட்டின் மிக மோசமான நிர்வாக திறன் கொண்ட நகரம் பெங்களூரு. விவசாயிகள் தற்கொலையில் கர்நாடகம் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது.

மாநில காங்கிரஸ் ஆட்சி மீது மக்கள் வெறுப்பில் உள்ளனர். மாநில மக்கள் ஒரு நேர்மையான மாற்றத்தை விரும்புகிறார்கள். டெல்லியில் கல்வி மற்றும் சுகாதாரத்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு உள்ளன. இதற்கு சர்வதேச அளவில் பாராட்டு கிடைத்து உள்ளது. இங்கு எங்கள் கட்சி வெற்றி பெற்றால் அதே போல் கர்நாடகத்திலும் நாங்கள் செய்வோம்.

வேட்பாளர்கள் விவரம்

1. சர்வக்ஞநகர்-பிருத்விரெட்டி(மாநில ஒருங்கிணைப்பாளர்), 2. சாந்திநகர்-ரேணுகா விசுவநாதன், 3. கே.ஆர்.புரம் -லிங்கராஜ் அர்ஸ், 4. சி.வி. ராமன்நகர்-மோகன் தாசரி, 5. பசவனகுடி-எஸ்.ஜி. சீதாராம், 6. பி.டி.எம்.லே-அவுட்- எம்.சி.அப்பாஸ், 7. ஹெப்பால்-ராகவேந்திர தானே, 8. புலிகேசிநகர்-ஆர்.சித்த ராமையா, 9. சிவாஜி நகர்-அயூப்கான்.

10. பசவகல்யாண்-தீபக்மலகர், 11. சாமராஜா-மாளவிகா குப்பிவாணி, 12. தாவணகெரே தெற்கு-ராகவேந்திரா, 13. உப்பள்ளி-தார்வார் மத்தி-சந்தோஷ் நரகுந்து, 14. காக்வாட்-பாலசாகேப்ராவ், 15. கித்தூர்-ஆனந்த் அம்பன்னவர், 16. சிகாரிபுரா-சந்திரகாந்த் ரேவண்கர், 17. பத்ராவதி-ரவிக்குமார், 18. கங்காவதி-சரணப்பா.

இவ்வாறு பங்கஜ் குப்தா கூறினார்.

Next Story