புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முற்றுகை: சிறு வியாபாரிகள் போராட்டம்


புதுச்சேரி நகராட்சி அலுவலகம் முற்றுகை: சிறு வியாபாரிகள் போராட்டம்
x
தினத்தந்தி 21 March 2018 3:45 AM IST (Updated: 21 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

மார்க்கெட்டில் கடை ஒதுக்கக்கோரி சிறு வியாபாரிகள் புதுவை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி,

புதுவை முத்தியால்பேட்டை மார்க்கெட் புதுப்பிக்கும் பணி கடந்த 8 ஆண்டுகளாக நடந்தது. இதன்பின் ஒருவழியாக கடந்த டிசம்பர் மாதம் மார்க்கெட் திறக்கப்பட்டது.

மார்க்கெட்டை புதுப்பிக்கும் முன்பாக அங்கு அடிக்காசு கடைகள் வைத்திருந்த 74 சிறு வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்படும் என்று நகராட்சி சார்பில் உறுதி அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் மார்க்கெட் திறக்கப்பட்டு கிட்டத்தட்ட 4 மாதங்கள் ஆன போதிலும் அவர்களுக்கு கடைகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த சிறு வியாபாரிகள் நேற்று கம்பன் கலையரங்க வளாகத்தில் உள்ள நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பிரதேச செயலாளர் ராஜாங்கம் தலைமை தாங்கினார்.

போராட்டத்தில் சி.ஐ.டி.யு. தலைவர் முருகன், பொதுச்செயலாளர் சீனுவாசன், சிறுவியாபாரிகள் சங்க கவுரவ தலைவர் முருகன் உள்பட பெண் வியாபாரிகள் பலர் கலந்துகொண்டனர். அப்போது அவர்களை பேச்சுவார்த்தைக்கு வருமாறு ஆணையர் கணேசன் அழைப்பு விடுத்தார்.

பேச்சுவார்த்தையில், இன்னும் ஒரு வாரத்தில் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக ஆணையர் கணேசன் உறுதி அளித்தார். அவரது உறுதிமொழியை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது. 

Next Story